தோட்டக் கம்­ப­னி­களால் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை வழங்க முடி­யா­விட்டால் அவற்றை அர­சாங்­கத்­திடம் கைய­ளி­யுங்கள். நாம் அதிக சம்­ப­ளத்தை வழங்­குவோம் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, பகி­ரங்க சவால் விடுத்தார்.

தோட்டக் கம்­ப­னிகள் நஷ்­டத்தில் இயங்­கு­வ­தென்­பது "பொய்" அதில் உண்மை இல்­லை­யென்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கண்டி மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றபோது அதில் கலந்து கொண்டு உரை­யாற்றுகை­யி­லே­யே உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

நல்­லாட்சி அர­சின வரவு செலவுத் திட்­டத்தில் அரச, தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளங்கள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஆனால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு தோட்டங் கம்­பனி நிர்­வா­கங்கள் மறுத்து வரு­கின்­றன.

பெருந்­தோட்­டங்கள் நஷ்­டத்தில் இயங்­கு­வ­தாக கூறு­கின்­றனர். இதில் உண்­மை­யில்லை. நல்ல இலாபம் கிடைக்­கின்­றது. அவ்­வாறு நஷ்டம் என்­பது "பொய்" அப்­படி நஷ்­ட­மென்றால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கு­மாறு நான் பகி­ரங்­க­மாக சவால் விடுக்­கிறேன்.

தோட்­டங்­களை எடுத்து நடத்த உள்ளூர் மற்றும் வெ ளிநாட்டு முத­லீட்­டா­ளர்கள் "வரி­சையில்" நிற்­கின்­றனர். எனவே எம்மால் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை வழங்க முடியும்.

தோட்டக் கம்­ப­னிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தோட்­டங்கள் அனைத்தும் அர­சுக்கு சொந்தம். அவை கம்­ப­னி­க­ளுக்கு குத்­த­கைக்கே வழங்­கப்­பட்­டுள்­ளன என்­பதை ஞாப­கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வரவு செலவுத் திட்­டத்தில் அரசு தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை உயர்த்­தி­யுள்­ளது. ஆனால் தோட்டக் கம்­ப­னிகள் பொய் கூறிக் கொண்டு அப்­பாவித் தொழி­லா­ளர்­களுக்கு சம்­பள உயர்வை வழங்­கா­துள்­ளது. அம் மக்­க­ளுக்கு கிடைக்கும் சம்­பளம் வாழ்­வ­தற்கு போது­மா­ன­தல்ல. பெரும் நெருக்­க­டிக்கு மத்­தியில் கஷ்­டத்­தி­லேயே வாழ்­கின்­றனர். எனவே அவர்­களின் சம்­பளம் உயர்த்­தப்­பட வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்து அர­சுக்கு கிடை­யாது.

தோட்டத் தொழி­லா­ளர்கள் அமை­தி­யாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு தமது பங்­க­ளிப்பை வழங்கும் மக்கள். தோட்டக் கம்­ப­னிகள் தோட்­டங்­களை குத்­த­கைக்கு எடுத்­த­போது விதிக்­கப்­பட்ட எந்த நிபந்­த­னை­க­ளையும் நிறை­வேற்­றி­ய­தில்லை.

அம்­மக்­க­ளுக்­கான பாதைகள் செப்­ப­னி­டப்­ப­ட­வில்லை, வீட்டு வச­திகள் அடிப்­படை வச­திகள் எது­வுமே செய்து கொடுக்­க­ப­ட­வில்லை.

வெள்ளைக்­கா­ரர்கள் கம்­ப­னி­க­ளுக்கு 5000 ஏக்­கரே வழங்­கினர். ஆனால் இன்­றைய நிலை­வேறு. ஒரு சில தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு 20000 ஏக்­க­ருக்கு மேல் உள்­ளன. ஒரு சில தோட்டக் கம்­ப­னிகள் வரு­மானம் போதாது என்­கின்­றனர்.

எனவே தான் நான் கூறு­கின்றேன் வரு­மானம் இல்­லா­விட்டால் நஷ்டம் என்றால், ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க முடி­யா­விட்டால் அவ்­வா­றான அனைத்து தோட்­டங்­க­ளையும் அர­சுக்கு கைய­ளி­யுங்கள்.

இன்று உள்ளூர் மற்றும் வெ ளிநாட்டு முத­லீட்­டா­ளர்கள் தோட்­டங்­களை பெறுப்­பேற்று நடத்த தயா­ராக இருக்­கின்­றனர். தோட்­டங்­களை அபி­வி­ருத்தி செய்­யவும், தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கவும் அர­சினால் முடியும். நான் இரண்டு முறை பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக பதவி வகித்­துள்ளேன்.

எனவே தோட்­டங்­கள் நஷ்­டத்தில் இயங்­க­வில்லை, அனைத்தும் இலா­பத்தில் இயங்­கு­கின்­றன என்­பது எனக்குத் தெரி­யும். இதனால் இனியும் தோட்டக் கம்­ப­னிகள் ஏமாற்று வித்­தை­களை கைவிட வேண்டும்.

அத்­தோடு எனது காலத்தில் அமைச்­ச­ரவை பத்­திரம் முன்­வைக்­கப்­பட்டு தொழி­லா­ளர்­க­ளுக்கு 7 பார்ச்சஸ் காணியும் வழங்­கப்­பட்­டது.

புதிய நல்­லாட்­சியின் வரவு செலவுத் திட்டம் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையால் நிறை­வே­றி­யது. இதன் மூலம் நாட்டு மக்­களின் விருப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே நான் அனைத்து அர­சியல் வாதி­க­ளிட­மும் பிர­தேச அர­சியல் வாதி­க­ளி­டமும் கேட்டுக் கொள்­வது "குரோத" அர­சி­யலை கைவி­டுங்கள். நாட்டின் அபி­வி­ருத்­தியை இலக்­காக வைத்து அனை­வரும் செயற்­பட முன்­வர வேண்டும்.

உலகத் தலை­வர்கள் இன்று எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்பு செய்­ய­த­யா­ரா­க­வுள்­ளனர்.

கண்டி மாந­கரை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அனைத்து திட்­டங்­க­ளையும் அரசு தயார் செய்­துள்­ளது. அதற்­கான உறுதி மொழி­களை வெ ளிநாட்டு முத­லீட்­டா­ளர்கள் பிர­த­ம­ருக்கு வழங்­கி­யுள்­ளனர்.

கடந்த ஆட்­சி­யின்­போது எமது நாட்டை திரும்பிப் பார்க்காத நாடுகள், நாட்டுத் தலைவர்கள் இன்று எமது நாட்டை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை, நல்லாட்சி அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாகவே எமது நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்­றார்.

இக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக, எம்.எச். ஹலீம், ஆனந்த அளுத்கமகே எம்.பி.உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.