ஜனாதிபதி தேர்தலுக்காக வீதிக்கிறங்கி போராடுவது பிரயோசனமற்றது -  நிமல் அறிவுரை

19 Mar, 2022 | 09:14 PM
image

(எம்.மனோசித்ரா)


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுவதைப் போன்று அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகிவிட முடியாது. 

அதே போன்று அவர் கோருவதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது. 

எனவே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வீதிக்கிறங்கி போராடுவது பிரயோசனமற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாடு நடைபெற்றது. 

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த வாரம் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரினார்.

அவ்வாறு செய்ய முடியாது. அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகவும் முடியாது, அவருக்கு இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலிருந்து தெளிவுபடுத்த வேண்டும்.

ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த அவரது பதவி காலத்திற்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே டிகிரி பண்டார விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

எனவே ஜனாதிபதியொருவர் அவரது பதவி காலத்தில் உயிரிழந்தாலோ அல்லது தானாக பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலோ பாராளுமன்றத்தின் ஊடாகவே அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

அதனை விடுத்து தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வீதிக்கிறங்கி போராடுவது பிரயோசனமற்றது. 

பொதுத் தேர்தலொன்றின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்று இரண்டரை ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி விரும்பினால் அடுத்த பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியும். 

எவ்வாறிருப்பினும் 2023 மார்ச் மாதத்திற்கு முன்னர் பிரதேசசபைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. 

அடுத்த ஆட்சியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைப்பது அல்லது அமைக்கப்படும் ஆட்சியில் தீர்க்கமானதொரு சக்தியாக செயற்படுவதே சுதந்திர கட்சியின் இலக்காகும். 

சு.க.வின் கோரிக்கைக்கு அமையவே சர்வகட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது. 

அது எமது வெற்றியாகும். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு திட்டங்களை இதன் போது நாம் முன்வைப்போம்.

நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பு இன்றியமையாததாகும். அதில் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் மாற்றங்கள் அவசியம் என்பதோடு , நிறைவேற்றதிகார முறைமையை முற்றாக நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28