தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு : ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Robert

17 Oct, 2016 | 12:16 PM
image

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வேண்டி பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று காலை 9.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பல்வேறு வகையான வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் இப்போராட்டத்தை கல்லூரியின் வளாகத்தில் தரையில் அமர்ந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் 200ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரியின் வளாகத்திற்கு வெளியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக இதற்கான மேலீட அனுமதி கிடைக்காத பட்சத்தில் இம்மாணவர்களின் போராட்டம் வாளகத்தின் உட்பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடாத்தப்பட்டது. அத்தோடு கல்லூரியின் பிரதான நுழைவாய் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடதக்கது. 

இருந்தும் மாணவ்ரகளிடம் இது தொடர்பில் வினாவிய போது,

எமது தாய், தந்தையர்கள் தோட்டத்தில் பணிபுரிந்து அவர்கள் பெரும் வேதனத்தின் ஊடாகவே மேல் படிப்பினை நாம் கற்று வருகின்றோம்.

இந்த நிலையில் எமது தாய், தந்தையினர் வேதன உயர்வாக 1000 ரூபாவை வேண்டியே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், எங்கள் கல்வியில் நாங்கள் முன்னெற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்திற்கென இக்கல்லூரியில் கற்கும் தமிழ், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் சிங்கள மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் தொடர்பில் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக அவர்களிடம் வினாவியபோது,

இப்போராட்டம் இங்கு கல்வி கற்கும் தமிழ் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரியின் வளாகத்திற்கு வெளியில் செல்வதற்கான அனுமதியை பீடாதிபதி என்ற ரீதியில் நானே மறுத்து விட்டேன். இது தொடர்பில் கல்வி மேலீடத்திற்கு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஊடகவியலாளர்கள் வளாகத்தின் உட்பகுதிக்கு உள்ளெடுக்கப்படாமைக்கு வருந்துவதாகவும், இந்த போராட்டத்தினை மாணவர்களின் விருப்பத்திற்கேற்பவே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போராட்டம் காலை 10.50 மணியளவில் நிறைவுபெற்று மாணவர்கள் தத்தமது வகுப்புகளுக்கு சென்றமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04