நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க சென்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ வைத்தியசாலைக்கு தினமும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டுச் செல்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ வைத்தியசாலைக்கு கறுப்பு நிற காரில் வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ_ம் உடன் இருந்தார்.

ஆனால், அவர் காரில் வைத்தியசாலை உள்ளே சென்றதை யாரும் பார்க்கவில்லை. வெளியே வரும்போது தான் ரஜினிகாந்த் காரில் இருப்பதை வெளியே நின்றவர்கள் பார்த்தனர்.

காருக்குள்ளும் விளக்கு எதுவும் எரியாததால், ரஜினிகாந்தை தெளிவாக யாரும் பார்க்க முடியவில்லை. அவர் வந்த காரும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.

முன்னதாக, வைத்தியசாலை உள்ளே சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியர்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.