கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை

18 Mar, 2022 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

'நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்' என்ற தொனிப்பொருளிலில் சோசலிச இளைஞர் அணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

May be an image of 7 people, people standing, outdoors and text that says 'SYU 5YU දේගප්‍රම තරුණයිනි, 6ට රැකීමට එක්වච! #You SYU SYU SYU පාලිම් තවත් එපා! තෙල් ටැංකි, ඇමරිකාවට බලිදුන් යුගදනව් හා පවරා ගනු! ණ සංගමය #SYUSRILANKA வேண்டாம் எண்ணெய் வரிசைகள்! இந்தியாவுக்கு தாரைவார்த்த எண்ணெய் தொட்டிகளையும், அமெரிக் காவுக்கு தாரைவார்த்த யுகதனவியையும் உடனடியாக மீளப் பெறவும்! #JVP Youth சோஷலிச இளைஞர் சங்கம் #SYU SRILANKA #JVP Yout'

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு துரித தீர்வினை வழங்கி வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு , பௌத்த மதகுரு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஆக்கிரோஷமாக தாக்க முற்பட்டார். இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. 

Image

'எரிபொருள் வரிசை வேண்டாம்' , 'இந்தியாவிற்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளையும் , அமெரிக்காவிற்கு வழங்கிய யுகதனவி மின்நிலையத்தையும் மீளப்பெறு' உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் பிரதான கோரிக்கைகயாகக் காணப்பட்டது.

May be an image of one or more people, people standing and outdoors

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மருதானை - டெக்னிகல் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 

குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. 

எவ்வாறிருப்பினும் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர்

May be an image of one or more people, people standing, military uniform and outdoors

May be an image of 8 people, people standing, military uniform and outdoors

இதன் காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிக நேரம் அங்கு அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்

May be an image of 2 people, people standing, outdoors, crowd and text

May be an image of one or more people, people standing, crowd and outdoors

'இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்' , 'நாம் இளம் பலசாலிகள்' , 'தாய் நாட்டை பாதுகாப்பது எமது பொறுப்பு - எமது பொறுப்பை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளி' , 'பொறுப்பை நிறைவேற்ற எம்முடன் ஒன்றிணையுங்கள்' , 'பொறுப்பற்ற தலைவர்கள் எமது நாட்டை விற்கின்றனர்' , 'இலஞ்சத்தை பெற்று வெளிநாட்டு சுற்றுலா செல்கின்றனர்' , 'யுகதனவி, எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறு', 'உண்பதற்கு வழியில்லை - எரிபொருள் வரிசைக்கு முடிவில்லை'  என்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து ஸ்தம்பிதம்

May be an image of 1 person, standing, crowd and outdoors

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று முற்பகல் மருதானை டெல்னிகல் சந்தி வீதி, புறக்கோட்டை புகையிரத நிலைய வீதி மற்றும் ஜனாதிபதி செயலக வளாக வீதி என்பவற்றின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

 அத்தோடு லோட்டஸ் சுற்று வட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் ஊடாக பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஜனாதிபதி, பிரமரைப் போன்று வேடமிட்டுச் சென்றனர்

May be an image of 12 people, people standing, outdoors and text that says 'C லங்கா வகா LANKA SYU SY'

May be an image of 7 people, people standing, outdoors and monument

May be an image of 9 people, people standing, balloon, outdoors and text that says 'ලංකා LANKA லங்கா esa'

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரைப் போன்று வேடமிட்டு சென்றதோடு , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலட்சினையையும் எடுத்துச் சென்றனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியற்ற நிலைமை

May be an image of 3 people, people standing and outdoors

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டமையினால் அங்கு பதற்றமற்ற நிலைமை ஏற்பட்டது. 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்படவில்லை என்றும் , அங்கு பதற்றமான சூழல் மாத்திரமே உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37