பைப்றோ மையால்ஜியாக்குரிய சிகிச்சை

Published By: Robert

17 Oct, 2016 | 10:31 AM
image

நீண்ட நாள்களுக்கு தலை முதல் கால் வரையில் பகுதிகளில் வலி இருந்தாலும், அந்த வலி நாளுக்கு நாள் புதிய புதிய இடங்களில் தோன்றினாலும், சோர்வு, தலைவலி, ஞாபக மறதி, தூக்கமின்மை, காலையில் எழும்போதே உற்சாகமேயில்லாமல் எழுவது ஆகியவை தோன்றினாலும் உங்களுக்கு பைப்றோ மையால்ஜியா பாதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

உடனே சிலர் அது என்ன பைப்றோ மையால்ஜியா? என கேட்பர். மருத்துவத்துறையினர் இதற்கு முன்பு பைப்றோ சைட்டீஸ் என குறிக்கப்பட்ட தசை வலி நோய் தான் இந்த பைப்றோ மையால்ஜியா. இது வாழ்க்கை முழுவதற்கும் எம்மோடு பின்னி பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகம் முழுவதும் உள்ளது. இதன் முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே தருணத்தில் இந்த நோய் பாதிப்பினை நாம் எலும்புத் தேய்மான நோயுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. அது வேறு வகையினது. இது தனி வகையினது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இது முழுக்க முழுக்க தசை தொடர்புடையது.

ஆண்கள், பெண்கள் மிக குறைந்த அளவிலான சிறுவர்கள் என எல்லோரையும் இந்த தசை வலி நோய் தாக்குகிறது. இருப்பினும் இவ்வகை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கிறார்கள்.

இதற்கான நிவாரணம் மருத்துவத்துடன் உடற்பயிற்சி எடுத்துக் கொள்வதும், மனம் அமைதியடைவதற்கான பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியமானது. அதனைக் காட்டிலும் இந்த நோய் எப்பகுதியை தாக்கியிருக்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப ஆலோசனையை பெற்று அதனை கடைபிடிக்கவேண்டும்.

இவர்களுக்கு தூக்கம் தான் சிறந்த நிவாரணம் என்பதால் இரவு நேரத்தில் கோப்பி அருந்துவதோ, மது அருந்துவதோ கூடாது. அவ்வகை பழக்கம் இருப்பின் அதனை முற்றாக தவிர்க்கவேண்டும்.

இத்தகைய தசை வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மூளைப் பகுதியில் சுரக்கும் செரடேர்லின் என்ற வேதிப் பொருள் இயல்பை விட குறைவாக சுரப்பதும், வலியை உண்டாக்கக்கூடிய substance P என்ற வேதிப்பொருள் இவர்களின் தண்டுவடப்பகுதியில் இயல்பை விட அதிகமிருப்பதும் ஆய்வில் தெரியவருகிறது. இதனை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான மருத்துவத்தினை தகுந்த வலி நிவாரண மருத்துவ நிபுணர்களின் மூலம் அறிந்துகொண்டு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் உடற்பருமன் நோயும், மூட்டு வலியும் வரும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் மூளை வலி உணர்ச்சியை அதிகளவில் தூண்டும் காரணியாக மாறிவிடவும் வாய்ப்பிருப்பதால் மூளைத் தொடர்பான சிக்கல்களும் வரக்கூடும். எனவே இதனை அலட்சியப்படுத்த வேண்டாம்.

டொக்டர் பிரேம் ஆனந்த் M.D.,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29