2021 ஆம் ஆண்டில் ஒப்பற்ற வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த யூனியன் அஷ்யூரன்ஸ்  

16 Mar, 2022 | 06:13 PM
image

யூனியன் அஷ்யூரன்ஸ் 2021 ஆம் ஆண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததனூடாக, இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. 

சில முக்கியமான பிரிவுகளில் ஒப்பற்ற வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருந்தது.

சிறந்த 5 துறைசார் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதியுயர் வழமையான புதிய வியாபார வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்திருந்ததுடன், துறையின் சராசரியான 29% உடன் ஒப்பிடுகையில் 42% வளர்ச்சியை எய்தியிருந்தது. 

ஒட்டுமொத்த தொழிற்துறையில் இரண்டாவது மாபெரும் வழமையான புதிய வியாபார தயாரிப்பாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்ந்தது.

மேலும், 2021 ஆம் ஆண்டில், நிறுவனம் Million Dollar Round Table (MDRT) இல் 300 தகைமையாளர்களை உருவாக்கியிருந்தது. 

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிருந்த அதியுயர் எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களுக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்த நிலையில், இந்த சிறந்த பெறுமதிகளை யூனியன் அஷ்யூரன்ஸ் எய்தியிருந்தமை விசேட அம்சமாகும்.

 

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், நிறுவனத்தின் வினைத்திறன் தொடர்பில் அதிகளவு பெருமை வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையை மாற்றியமைக்கும் தூரநோக்குடைய தந்திரோபாயத்திட்டத்தினூடாக இந்த வெற்றிகரமான பெறுபேறுகளை எய்த முடிந்திருந்ததாக குறிப்பிட்டார். “வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தந்திரோபாயம், சுறுசுறுப்பு மறறும் ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவம் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்கி, அதனூடாக இலங்கையின் கனவுகளுக்கு வலுவூட்டும் உறுதி மொழியை பேணியிருந்ததனூடாக எமது உறுதியான பெறுபேறுகளை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.” என்றார்.

 

நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்த ஊழியர்கள், முகவர்கள், ஆலோசகரக்ள் மற்றும் இதர பிரதான பங்காளர்களுக்கும் கோம்ஸ் தமது நன்றிகளை தெரிவித்தார்.

“எம்மை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதில் எம்மீது நம்பிக்கை கொண்டு எமக்கு பங்களிப்பு வழங்கியிருந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், நிறுவனத்தின் சாதனைகள் மற்றும் மைல்கற்கள் போன்றன எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளன.

பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து, இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வலுவூட்டுவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.  

 

2021 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சில முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற் சாதனைகளை பதிவு செய்திருந்தது.

நிகர செலுத்தப்பட்ட கட்டுப்பணம் (GWP) ரூ. 15 பில்லியனை கடந்திருந்தது. இது முன்னைய ஆண்டின் பெறுமதியான ரூ. 13 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பாகும். வழமையான புதிய வியாபார கட்டுப்பணங்கள் ரூ. 3.1 பில்லியன் முதல் ரூ. 4.4 பில்லியனாக அதிகரித்தது. ஆண்டில் முதலீட்டு வருமானம் ரூ. 5 பில்லியனை கடந்திருந்தது.

மொத்த தேறிய வருமானம் ரூ. 17.4 பில்லியனிலிருந்து ரூ. 20.6 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக தேறிய பணப்பாய்ச்சல் ரூ. 8.3 பில்லியனிலிருந்து ரூ. 9.3 பில்லியனாக அதிகரித்திருந்தது. 

 

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலாபகரத்தன்மையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை நாம் பதிவு செய்திருந்தோம். வரிக்கு முந்திய இலாபம் 46% இனால் அதிகரித்து ரூ. 2.6 பில்லியனாக பதிவாகியிருந்தது.

2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 1.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 921 மில்லியனிலிருந்து ரூ. 2.1 பில்லியனாக அதிகரித்திருந்தது. GWP, தேறிய முதலீட்டு வருமானம், செலவுகளை முறையாக கட்டுப்படுத்தியிருந்தமை மற்றும் செயன்முறை முன்னேற்றங்கள் போன்றவற்றினூடாக இந்த அபார 123% வளர்ச்சியை எய்த முடிந்தது.” என்றார்.     

 

நிதி உறுதித் தன்மையை வெளிப்படுத்தி, நிறுவனத்தின் சொத்துக்கள் இருப்பு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 71 பில்லியனாக பதிவாகியிருந்தது.

முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 63 பில்லியனாக காணப்பட்டது.

நிர்வாகத்தின் கீழான சொத்துகள் ரூ. 59 பில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி கடந்த ஆண்டில் ரூ. 52 பில்லியனாக காணப்பட்டது. பங்குதாரர் பங்காண்மைப் பெறுமதி ரூ. 15.4 பில்லியனாக அதிகரித்திருந்ததனூடாக, நிறுவனத்தின் நிதி நிலைமை மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் நிதியத்தில் சிறந்த வளர்ச்சி பதிவாகியிருந்தது. ரூ. 42.9 பில்லியனிலிருந்து ரூ. 49.8 பில்லியனாக அதிகரித்திருந்தது. ஆயுள் காப்புறுதி பிரிவு வளர்ச்சியின் பிரகாரம் இந்த உயர்வும் பதிவாகியிருந்தது.

சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், நிறுவனத்தின் உறுதிமொழிக்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான காப்புறுதிதாரர்களுக்கான பங்கிலாப விகிதம் 8% பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

பங்குதாரர்களுக்கான அர்ப்பணிப்பை பேணும் வகையில், ஆரோக்கியமான பங்குதாரர் பங்கிலாபமான பங்கொன்றுக்கு ரூ. 22 வீதம் அறிவிக்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவதும் இறுதியானதுமான பங்கிலாபமாக இது அமைந்திருந்தது.

 

ரூ. 1 பில்லியன் ANBP பெறுமதியைக் கடந்து நாட்டின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவாகியிருந்தது. அதிகளவான பாங்கசூரன்ஸ் பங்காண்மைகளை எய்தியிருந்ததுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கு வழிகோலியிருந்தது.

 

நிறுவனத்தின் முன்னணி செயற்திட்டமான - Clicklife டிஜிட்டல் பொறிமுறைக் கட்டமைப்பினூடாக, துறையில் அவசியமான புரட்சிகரமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு வழியேற்படுத்தப்படும்.

பாரம்பரிய ஆயுள் காப்புறுதியை மாற்றியமைத்து, டிஜிட்டல் முறையிலமைந்த காப்புறுதிக் கட்டமைப்பை உருவாக்கியிருந்தது.

காப்புறுதி தயாரிப்புகளை உள்வாங்கி, காப்புறுதித் திட்டங்களுக்கு சேவையளிப்பதை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பாடல்கள் மற்றும் பரிபூரண சுகாதார மற்றும் வாழ்க்கை முறை கட்டமைப்பை வழங்குதல் போன்றவற்றினூடாக இதை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

 

ஊழியர் அபிவிருத்தியில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெறுமதி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சிறந்த திறமையாளர்களை கட்டியெழுப்புவதில் அதிகளவு கவனம் செலுத்தப்படுவதுடன், அவர்களின் தொழில்நிலை வளர்ச்சியை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இது நிறுவனத்தின் வெற்றியில் பங்களிப்பு வழங்குகின்றது.

 

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் காப்புறுதித் துறையின் வரம்புகளை தொடர்ந்தும் நகர்த்தும் வகையில் இயங்குகின்றது.

நிறுவனத்தினால் தொடர்ந்தும் தனது விநியோக நாளிகைகளை பன்முகப்படுத்துவது, பாங்கசூரன்ஸ் பங்காண்மைகளை மேம்படுத்துவது, புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை கட்டியெழுப்புவது மற்றும் புரட்சிகரமான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது போன்றவற்றில் நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58