தொழிலாளர் தீர்ப்பாய சபைக்கு நீதிமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - நிமல் சிறிபால

Published By: Digital Desk 3

16 Mar, 2022 | 07:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தொழிலாளர்களின் நட்டஈடு தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிவான் நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு நிகரான அதிகாரம் பிரதேசசபை ரீதியில் இருக்கும் 44 தொழில் தீர்ப்பாய சபைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அதுதொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

அத்துடன் தொழிலாளர்களின் வாழ்க்கைச்செலவுக்கு நிகரான சம்பளத்தை பெற்றுக்கொடுக்காமல் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பயனை முதலாளிமார் பெற்றுக்கொள்ள முடியாது என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தொழிலாளர் முறைப்பாடு முகாமைத்துவ கட்டமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக ஊழியர் ஒருவரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதி, மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டதுடன் அதுதொடர்பாபில் ஊழியார்களுக்கு குறுஞ் செய்தி மூலம் அறிவிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியத்தை மீள பெற்றுக்கொள்ளும்போது ஊழியர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே விண்ணப்பப்படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் அதனை இலகுவில் பெற்றுக்கொள்ள வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்திருக்கின்றோம்.

மேலும் தொழிலாளர்களுக்கான நட்டஈட்டு தொகையை 5 இலட்சத்தில் இருந்து 20இலட்சம் ரூபாவரை அதிகரித்திருக்கின்றோம்.

  20வருடங்களுக்கு பின்னரே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் தொழிலாளர் நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கும் மேலும் பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கின்றது. 

ஏனெனில் நீதிமன்றங்களில் இருக்கும் நெருக்கடி மற்றும் தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளர் ஒருவரே இருக்கின்றார்.

அவரே நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தொழிலாளர்களின் நட்டஈடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருக்கின்றார்.

அதனால் தொழிலாளர்களின் நட்டஈடு தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிவான் நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு நிகரான அதிகாரம் பிரதேசசபை ரீதியில் இருக்கும் 44 தொழில் தீர்ப்பாய சபைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அதுதொடர்பான அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

இதன் மூலம் நீதிமன்றங்களில் நெருக்கடி குறைவதுடன் தொழிலாளர்களின் நட்டஈடும் விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமாகின்றது. தொழிலாளர் நட்டஈடு தொடர்பாக இதுவரை 16ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி இருக்கின்றன.

மேலும் கொவிட் நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள். அதனால் எமது ஏற்றுமதி வருமானம் நூற்றுக்கு 18 வீதம் அதிகரித்திருந்தது.

அதனை நாங்கள் மறந்துவிடக்கூடாது. அதனால் எவ்வாறான நெருக்கடிகள் இருந்தாலும் இந்த காலத்தில்தான் நாங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக மிகவும் முயற்சியுடன் செயற்படவேண்டும். 

தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதார நெருக்கடிக்கு நிகரான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதற்காக சம்பள நிர்ணயசபை, தேசிய சம்பள கொள்கையை உடனடியாக மாற்றியமைக்கவேண்டி இருக்கின்றது. 

தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கு போதுமான சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா என தேடிப்பார்த்து, அதுதொடர்பில் தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டி இருக்கின்றது.

அத்துடன் முதலாளிமாரும் இதுதொடர்பில் சிந்திக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் முதலாளிமார் தொழிலாளர்களின் வாழ்க்கைச்செலவை கருத்திற்கொண்டு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56