2021 ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான விருதுகள்

16 Mar, 2022 | 01:39 PM
image

இலங்கை விமானப்படை நலனுக்காக தங்கள் தொழில்துறையை தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற காரணங்களை கொண்டு சிறந்த விமானப்படை வீரவீராங்கனைகள் தெரிவு செய்யும் விழா வைபவம் கடந்த    2021 ம் மரச் 14 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் கட்டுநாயக்கவில் ஈகிள்ஸ் லகுன் வீவ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றபட்டு 2 நிமிட மௌன அஞ்சலியிடன் ஆரம்பிக்கப்பட்டது . 

மேலும் விமானப்படையின் நடன குழுவினரின் கலாச்சார நடனமும் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வின் ஏற்பாட்டு குழுவின் தலைவர் எயார் கொமடோர் லசித சுமணவீர அவர்களினால் விமானப்படை தளபதி உற்பட அணைத்து விருந்தினர்களும் வரவேற்கப்பட்டனர்.

கடந்த 2021 ம் ஆண்டில் தமது தொழில் பிரிவில் சிறந்த சேவையாளர்களை அந்த பிரிவின் பணிப்பகம் மூலம் தெரிவு செய்து கடந்த வருடம் தங்கள் தொழிலைத் தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற விடயம்களில் ஈடுபட்ட சிறந்த படைவீரவீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்த ஆண்டு சிறந்த விமானப்படை வீரராக கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பழுதுபார்க்கும் படைப்பிரிவை சேர்ந்த மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஈ .எம் ஜீ .ஐ . தயாபெமா அவர்களும் சிறந்த விமானப்படை வீராங்கணையாக வவுனியா விமானப்படை தளத்தில் 23ம் ரெஜிமென்ட் படைப்பிரிவில் பணிபுரியும் கோப்ரல் விக்ரமசிங்க எஸ் .சீ .எஸ் .எம் .கே. ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

இவர்களுக்கான வெற்றிகோப்பையினை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைப்படி இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08