100 விக்கெட்களைக் கைப்பற்றி அஷ்வின் புதிய சாதனை

Published By: Digital Desk 4

15 Mar, 2022 | 07:28 PM
image

( என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2019 முதல் நடத்தப்பட்டுவரும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விஷ்வா பெர்காண்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 100ஆவது விக்கெட்டை அஷ்வின் பூர்த்திசெய்தார்.

2019இல் ஆரம்பமான அங்குரார்ப்பண ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 14 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்களைக் கைப்பற்றிய அஷ்வின், தற்போது நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்தில் 7 போட்டிகளில் 21 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு அமைய 21 போட்டிகளில் அவர் 100 விக்கெட்களைக் கைப்பற்றி புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். இதில் 4 ஐந்து விக்கெட் குவியல்கள் அடங்குகின்றன.

தமிழ்நாட்டின் சென்னையில் 1986இல் பிறந்த ரவிச்சந்திரன் அஷ்வின், தனது 25ஆவது வயதில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார்.

வலதுகை சுழல்பந்துவீச்சாளரான அஷ்வின் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 442 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார். இதில் முப்பது 5 விக்கெட் குவியல்களும் ஏழு 10 விக்கெட் குவியல்களும் அடங்குகின்றன.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது கபில் தேவின் 434 விக்கெட்கள் என்ற சாதனையைக் கடந்த அஷ்வின், இந்திய பந்துவீச்சாளர்களில் 619 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அனில் கும்ளேக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58