கே.எஸ். ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ முன்னோட்டம் வெளியீடு

15 Mar, 2022 | 11:04 AM
image

இயக்குநரும், நடிகருமான கே. எஸ் ரவிக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ எனும் புதிய படத்தின் முன்னோட்டம் வெளியானது. 

இதனை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட்டனர்.  

ஆர்கே செல்லுலாயிட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. 

அறிமுக இயக்குநர்கள் சபரிகிரிசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் கே. எஸ். ரவிக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் ரோபோ ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. 

இவர்களுடன் யோகி பாபு, சுரேஷ் மேனன், தர்ஷன், லொஸ்லியா, பூவையர், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

Yogi Babu - Wikipedia

ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. 

இதில் அன்பிற்காகவும், அன்பினை பகிர்வதற்காகவும் உறவுகளை நாடும் ஒரு முதியவருக்கு, அன்பு காட்டி, அவரை அரவணைக்கும் ரோபோ ஒன்று கிடைக்கிறது. 

இயந்திரத்திற்கும், முதியவருக்கும் இடையேயான உறவை பேசும் படைப்பாக கூகுள் குட்டப்பா உருவாகியிருப்பதால், ரசிகர்கள் இந்த முன்னோட்டத்திற்கு பெரும் ஆதரவளித்து வருகிறார்கள். 

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், '' நடிகராக இருந்த என்னை 'உலகநாயகன்' கமல்ஹாசன் தான் 'தெனாலி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார்.  

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்திருக்கிறேன். 

CoronavirusOutbreak: Fans say director KS Ravikumar is the one who  introduced the quarantine method; share memes on Twitter | Tamil Movie News  - Times of India

எம்மிடம் உதவியாளராக பணியாற்றும் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, ‘கூகுள் குட்டப்பா’வை உருவாக்கி இருக்கிறோம். 

எம்முடைய உதவியாளர்களாக இருந்தாலும், படப்பிடிப்பின்போது எம்மை தயாரிப்பாளராக பார்க்காமல், நடிகராக வேலை வாங்கியது வியப்பை அளித்தது. 

அந்த ரோபோவை உருவாக்கி படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிட உதவிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

படத்திற்காக தர்ஷன் மற்றும் லொஸ்லியா என புதுமுகங்களை இயக்குநர்கள் தேர்வு செய்ததும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது. 

சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை நிறைவு செய்வதற்காக, எம்முடைய உதவியாளர்களாக இருந்து இயக்குநர்களாக அறிமுகமாகும் சபரீசன் மற்றும் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 இவர்கள் இயக்கிய ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகும் முன்னரே அவர் இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில் படத்தை இயக்கி வருவது  மகிழ்ச்சியை அளிக்கிறது.

படத்தின் நாயகி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டவுடன், இலங்கையில் பிறந்து தமிழை அழகாக பேசும் ‘பிக் பொஸ்’ பிரபலம் லொஸ்லியாவை படத்தின் நாயகியாக்கினோம்.

 

‘கூகுள் குட் டப்பா’ படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37