வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்தால் தட்டுப்பாடு ஏற்படும் - காமினி லொகுகே

Published By: Digital Desk 3

14 Mar, 2022 | 09:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது.

மக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்தால் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூக மட்டத்தில் தற்போது எரிபொருள் விலையேற்றம்,மின்விநியோக துண்டிப்பு ஆகியவை பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. எந்த அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்தாலும் எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது.

எரிபொருள் கொள்வனவிற்காக நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையும் செலுத்தியுள்ளோம்.கொவிட் தாக்கத்தினை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையிலும் எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை மத்திய வங்கி விநியோகித்துள்ளது.

நாடுதழுவிய ரீதியில் உள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதில் எரிபொருள் பவுசர்கள் குறைந்தளவில் காணப்படுவதால் தற்போது சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை எதிர்தரப்பில் நன்கு அறிவார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்கள் மத்தியில் உண்மையை மறைத்து அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள்.

எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்படும்.பொது மக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்தால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும். போலியான செய்திகளுக்கு கவனம் செலுத்துவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17