பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 04:33 PM
image

மட்டக்களப்பு எல்லைக்கிராமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று திங்கட்கிழமை (14) வழங்கப்பட்ட உணவை  உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

அரசியல், பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதியாவோரால் சிரமம் ; வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை | Virakesari.lk

குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கல்வகற்றுவரும்  மாணவர்களுக்கு உணவை பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து பெற்று வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து அதனை மாணவர்கள் உட்கொண்ட  பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து  அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது 

இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28