வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் தேடல்

14 Mar, 2022 | 11:54 AM
image

அகிலன் கதிர்காமர்

யதுர்ஷா உலகேந்திரன்

பாடசாலைக்கல்வியினை ஒரு தசாப்தத்திற்கு மேல் பெற்றக்கொண்ட எம்மில் பலருக்கு அதன் முக்கியத்துவம் பலதடவை நினைவூட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டங்களுக்கு பொதுமக்கள் பலத்த ஆதரவினை வழங்கியிருந்தனர். 

அது இலவசக்கல்விக்கொள்கைகள் ஊடாக முன்வைக்கப்பட்ட சமூக நோக்கின்னை வெளிக்காட்டியது.எவ்வாறாயினும் சிறுவர்களின் வளர்ச்சியில் அடித்தளமிடும் எமது கல்வி முறைமையில் பெரும் இடைவெளி ஒன்றுள்ளது. 

கல்வி என குறிப்பிடும்போது எம்மில் பலர் முன்பள்ளிகள் பற்றி நினைப்பதில்லை. முன்பள்ளிகள் முறையான கல்வி நிறுவனமாக பார்க்கப்படாததால்தான் அவை ஒழுங்கானஉட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் முன்பள்ளி ஆசிரியர்கள் சுரண்டுபடுவதும் என தொடர்ச்சியான புறக்கணிப்பு இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் எம்மை அணுகி தமது பிரச்சினைகள் தொடர்பாகஆராயவும் தமக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். 

அந்தவகையில் வடக்கின் பல பாகங்களில் நாம் நடத்திய சிறு கலந்துரையாடல்களில் விளங்கிக்கொண்டது யாதெனில் பல்லாயிரம் பெண்கள் சிறுவர்களை பராமரித்து வளப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றபோதிலும் அரசினதும் சமூக தலைமைகளாலும் தொடர்ச்சியாக அவமதிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர்;. வடக்கின் பல

கிராமிய மற்றும் தனிமையாக்கப்பட்ட பிரதேசங்களில்கடமையாற்றும் இந்த ஆசிரியர்கள் கொரோனா மற்றும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமது குடும்பங்களையும் மாணவர்களையும் பராமிரிக்கபோராடுகிறார்கள்.

நிலையற்ற தொழில்

வடமாகாணத்தில் இருக்கும் 13 கல்விவலையங்களில் 1,610 முன்பள்ளிகளில் உள்ளன. அதில் 3,181 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன் சுமார் 34,000 மாணவர்கள் கல்விகற்கிறார்கள். இந்த ஆசிரியர்களுக்கு மாகாண சபையின் கல்வித்திணைக்களத்தால் வெறும் 6,000 ரூபாய் மட்டுமே கொடுப்பனவாக வளங்கப்படுகின்றது. இவர்களுக்கு வேலைப்பாதுகாப்புமில்லை ஒழுங்கான ஒப்பந்தங்களும் இல்லை. 

இந்த வேலையை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்களுக்கு கர்ப்பினிக்கால விடுமுறையுமில்லை மருத்துவ விடுமுறை வழங்குவதற்கான எந்த முறைமையுமில்லை. பல முன்பள்ளிகளில் ஒரு ஆசிரியை மட்டுமே பணியாற்றுகிறார்: விடுமுறை எடுக்கவேண்டிய தருணங்களில் அவர்கள் தமக்கு பதிலாக கடமையாற்ற நம்பிக்கையான ஒருவரைவிட்டுசெல்ல நேர்கிறது. தொழிற்சங்க தலைமையில் இருப்பவர்கள் உட்பட பல முன்பள்ளி ஆசிரியர்கள் தசாப்தகால அனுபவத்தினை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஓய்வுக்கால நன்மைகள் எதுவுமில்லை.

ஓய்வூதியம், EPF மற்றும் ETF என எதிர்காலத்திற்கான எந்த நிதிப்பாதுகாப்பும் இல்லாமல் தான் முதுமைக்காலத்தில்தமது பணிகளை விட்டுவிலகுகிறார்கள். கடந்த சில வருடங்களாக வடக்கில் ஆறுதல் என்ற தொண்டு நிறுவனம் தனது முயற்சிகளால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வருட பயிற்சியும் முன்பள்ளிக்கல்வியில் டிப்ளோமா படிப்பினையும் வழங்கிவருகின்றது. இவ்வாறான டிப்ளோமா கற்கைகள் மற்றும் அரச திணைக்களகங்களின் பல்வேறு பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்களைப்பெற்றபோதிலும் அவர்களின் சம்பளத்தில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது. 

பல முன்பள்ளிகள் சிறு தொகையை கட்டணமாக பெற்றோரிடம் அறவிடுகின்றபோதிலும் அவை ஒழுங்காக கிடைப்பதில்லை. கிடைக்கும் தொகை ஆசிரியர்களின் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய போதாது. பெண்களாக இருக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த சம்பளம்போதாமையால் தமது கணவர்மார்களில் தங்கி வாழும் நிலையிலும் மேலும் பலர் கடன்பொறிக்குள்ளும் விழுகிறார்கள்.

அதிகமான ஆசிரியர்கள் முன்பள்ளிக்கு காலை 7.30மணிக்கே செல்கிறார்கள். மதியம் ஒரு மணிவரை காத்திருந்து அனைத்து பிள்ளைகளையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்த பின்னரே இவர்கள்; வீட்டுக் சென்று சமைக்க தொடங்குகிறார்கள். பண்டிகைக்காலத்தில், விசேட நாட்களில் கலாச்சார நிகழ்வுகளையும்; விளையாட்டுப்போட்டிகளையும் ஒழுங்கமைப்பது என தமது மேலதிக நேரத்தையும் தமது மாணவர்களின் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கிறார்கள். சிறுவர்களுக்கு பின்னால் தொடர்ச்சியாக ஓடியாடி அவர்களை சுத்தம் செய்து, அழும் வேளையில் ஆறுதல்படுத்தி மணித்தியாலக்கணக்காக வேலை செய்யும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களின் பணி இனங்கணப்படவுமில்லை அவர்களின் சேவைக்கேற்ற கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.

புறக்கணிக்கப்படும் நிறுவனங்கள்

வடமாகாணத்தில் உள்ள முன்பள்ளிக்கட்டிடங்கள் உள்ளூர் நிறுவனங்களான கிராமிய அபிவிருத்தி நிலையங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் மதம்சார் நிறுவனங்களின் சொத்துக்களாகும்.

கல்வித்திணைக்களத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் கூட இந்த நிறுவனங்களின் தலைமைகளிடமே ஆசிரியர்களை நியமிக்கும் மற்றும் பணி நீக்கம் செய்யும் அதிகாரங்கள் இருக்கின்றது. இதனால் ஆசிரியர்கள் அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து சுயாதீனமாக செயற்படமுடியாத சூழலே காணப்படுகின்றது.

சிலநேரம் கற்பித்தல் முறையைக்கூட இந்த உள்ளூர் தலைவர்களே தீர்மானிக்கிறார்கள். பல ஆசிரியர்கள் இந்த உள்ளூர் தலைவர்கள் மற்றும் அந்த சமூக நிறுவனங்களின் விருப்பத்திற்கு தலையசைக்காமல் போனால் தமது பணிகளை இழக்க நேரிடும் என்ற பயத்தில் கடமையாற்றுகிறார்கள். மாகாண கல்வித்திணைக்களத்திற்கு இந்த பிரச்சினைகளுக்குள் தலையிடும் அதிகாரம் இல்லை: முன்பள்ளிகளை பதிவு செய்யவும் அவற்றை கண்காணித்து வழிகாட்டவுமே அதிகாரங்கள் அவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட அதிகாரிகளால் இந்த முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு திசைகளில் இழுக்கப்படுகிறார்கள். கல்வித்திணைக்களம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு, கச்சேரி, சுகாதார அமைச்சு என பல அதிகாரிகள் இவர்களை கண்காணிப்பதாகவும் முகாமை செய்வதாகவும் கூறி இவர்களின் பணியையும் நேரத்தையும் எந்த எழுத்துமூல அறிக்கையும் இல்லாமல் நாடுகிறார்கள். தேவை ஏற்படும்போது தரவுகளை எடுத்துத்தரவும் வருட இறுதியில் தம்மிடம் மிகுதியாய் இருக்கும் பணத்தினை செலவிட பயிற்சிப்பட்டறை மற்றும்‘பயிற்சிகள்’ என இந்த ஆசிரியர்களைஅலக்கழிக்கிறார்கள்.

மேலும் முறையான ஆவணப்படுத்தல் இல்லாததால் இவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் தான் என உறுதிப்படுத்தும் அடையாள அட்டை கூட இல்லை. அதனால் அரசின் உதவித்திட்டங்களையோ வங்கிக்கடன் திட்டங்களையோ பெறமுடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். சமூக மட்டத்தில் அவர்களை ஆசிரியர்கள் என அடையாளப்படுத்துவது அவர்கள் அணியும் சேலை மட்டுமே, ஆனால் முன்பள்ளி ஆசிரியர்கள் என குறிப்பிட்டு தெரிவிக்கும்போது தாழ்வான பார்வையே அவர்களுக்கு கிடைக்கின்றது.

மரியாதையும் போராட்டமும்

அண்மையில் ஆரம்பித்த வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டமானது தமது பிரச்சினைகளை வெளியில் தெரியப்படுத்துவதற்கான முதல்படியாகும். பல நிறுவனங்கள் முன்பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் எமது எதிர்கால தலைமுறையின் சமூகவளர்ச்சிக்கு அடித்தளத்தையிடும் முன்பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பை உணர்ந்து பாராட்ட தவறுகின்றோம். இந்தப் புறக்கணிப்பானது பலதுறைகளில் உள்ள பால்நிலைசார்ந்த சுரண்டல்களில் ஒன்றாகும். மேலும் இது பெண்களே பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற சமூக பார்த்தை ஒரு தார்மீக மற்றும் உணர்ச்சி சார்ந்த வற்புறுத்தலுடன்திணிக்கின்றது. எனினும் இந்த பாரத்தை சுமத்தும் சமூகம் அவர்களின் துன்பங்களை கண்டும் காணமல் இருக்கின்றது.

ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்தின் மூலையிலும் முன்பள்ளிகள் இருக்கின்றன.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையே எமது எதிர்கால பிரச்சினைகளை இனங்காட்டுவதாக உள்ளது.வடக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் பெரும் பலம்என்னவென்றால் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக்கொண்ட அவர்களின்தொழிற்சங்கம் ஆகும்.

இந்த தொழிற்சங்கம் தனது அங்கத்தவ எண்ணிக்கையை அதிகரித்து நியாயமான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் போன்ற கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கவேண்டும். இதுவேநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சவால்களை சந்திக்கும் ஆசிரியர்களுக்குமுன்மாதிரியாக அமையும். எமக்காவும் எமது எதிர்கால சந்ததியினருக்காவும் முன்பள்ளிகளை செறிவூட்டி முற்போக்கான நிறுவனங்களாக மாற்றியமைக்கவேண்டிய தார்மீக கடமை எம்மிடம் இருக்கின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் எமது ஆதரவானது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் உயர்த்தும் ஒரு சக்தியாகவும் அது இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22