என்ன செய்யப்போகிறது தமிழர் தரப்பு?

14 Mar, 2022 | 12:00 PM
image

(கபில்)

“ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னால் இருந்தும், அதற்கு ஆதரவளித்தும், அதன் மீது நம்பிக்கை வைத்தும் தமிழர் தரப்பு ஏமாந்து போன சந்தர்ப்பங்கள் தான் அதிகம்” 

இலங்கை அரசியலில் குழப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு அசைக்க முடியாத ஆட்சி உருவாகி விட்டதாக, கூறிக் கொண்டிருந்தவர்களுக்கு, கிடைத்த ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு காப்பற்றிக் கொள்ள முடியுமா என்ற பதற்றம் இப்போது தொற்றிக் கொண்டிருக்கிறது.

ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் உருவாகியிருக்கும் குழப்பங்கள், எவ்வாறு அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக ஆளும்கட்சி கூறுகின்ற நிலையில், ஜனநாயக முறையில் வாக்குகளால் தான் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார்.

ஆனால் அவரையும் தாண்டி, புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், தமிழர் தரப்பின் அரசியல் உத்திகள் எவ்வாறு அமையப் போகின்றன என்ற கேள்வி கொழும்பு அரசியலிலும், தமிழர் தரப்பிலும் தீவிரமாக காணப்படுகின்றன.

தமிழருக்கான உரிமைகளை மறுத்த, தமிழருக்கான நீதியை வழங்க மறுத்த, தமிழர் தரப்புடன் பேச மறுத்த அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பது, தமிழர் தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்த அரசியல் திருப்பங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பினும், இதனை கையாளுவது எவ்வாறு என்ற கேள்வியும், குழப்பமும் அவர்களிடம் உள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே ஆட்சி கவிழ்ப்புக்கான முயற்சிகள் தொடர்பாக பேசியிருந்தார்.

அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ நாட்டின் நன்மை கருதியும், முன்னேற்றம் கருதியும் கடந்தகால தவறுகளிலிருந்து பாடம்கற்றுக் கொண்டு சரியான பாதையில் நடக்க முற்படுவோருடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக” கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கருத்துக்கள், கொழும்பு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் தமிழர் தரப்பும் ஆர்வம் கொண்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது.

இப்போதைய நிலையில், இலங்கை அரசியலில் தமிழர் தரப்பின் பொதுவான அரசியல் உத்தி அல்லது மூலோபாயம் என்ன என்பது,முக்கியமாக தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்தக் கட்டத்தில், ஆட்சி மாற்றம் மற்றும் அதற்கான சூழலை உருவாக்குவதா அல்லது தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான சூழலை உருவாக்குவதா என்று, தெளிவாகத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-13#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13