மின்பாவனை கட்டணத்தை அதிகரிக்க முயற்சிப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் ? - சம்பிக்க ரணவக்க

Published By: Digital Desk 3

14 Mar, 2022 | 10:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருளின் விலை அதிகரித்துள்ள நிலையில் மின்கட்டணத்தையும் உயர்ந்தப்பட்சமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வீட்டு மின்பாவனை கட்டணத்தை 78 சதவீதத்தினால் அதிகரித்து வசதிபடைத்த உயர்வர்க்கத்தினரது மின்பாவனை கட்டணத்தை 18 சதவீதத்தினால் அதிகரிக்க முயற்சிப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

75 இலட்சம் மின்பாவனையாளர்களின் 6.5 மில்லியன் வீட்டுமின்பாவனையாளர்கள் உள்ளார்கள். 72,831 கைத்தொழில் மின்பாவனையாளர்களும் உள்ளதுடன்665 பிரதான நிலை ஹோட்டல்களும், 10385 அரச நிறுவனங்களும்,46,375 மத வழிபாட்டு தலங்களும், 884,400 கடைகள்மற்றும் அதனுடனான சேவைகளிலும் மின்பாவனையாளர்கள் காணப்படுகிறார்கள்.6.5 இலட்ச மின்பாவனையாளர்கள் அன்றாட வீட்டு தேவைகளில் ஈடுப்படுபடுகிறார்கள்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ள யோசனை நியாமற்றது. பூச்சியம்தொடக்கம் 30 வரையிலான மின்அலகினை பயன்படுத்தும் 13,89,000 மின்பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 78 சதவீதத்தினாலும், 31 தொடக்கம் 60 வரையிலான மின் அலகினை பயன்படுத்தும் 16 இலட்சத்து 500 மின்பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 50 சதவீதத்திற்கு குறைவாகவும்,61 தொடக்கம் 90 வரையான மின் அலகினை பயன்படுத்தும் மின்பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 18 சதவீதத்தினாலும் அதிகரிக்கும் யோசனையை மின்சார சபை முன்வைத்துள்ளது.

அதி உயர்மின்கட்டண அதிகரிப்பினால் இலங்கை மின்சார சபை வழமைக்கு மாறாக 60சதவீத மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளது. 6.5 மில்லியன் நடுத்தர வீட்டுபாவனையாளர்களின் மின்கட்டணத்தை 78 சதவீதத்தினாலும்,வசதி படைத்த உயர்தரப்பினரின் மின்கட்டணத்தை 18 வீதத்தினாலும் அதிகரிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தையும் அதிகரித்தால் நாட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்படுவார்கள். மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டால் அதனை நியாயமான முறையில் பொது மக்களால் தாங்கிக்கொள்ள கூடிய வகையில் அதிகரிக்க வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆணைக்குழு பலமுறை மீள்பரிசீலனை செய்ய வெண்டும்என்பதை வலியுறுத்தியுள்ளோம்என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31