உயிர்த்தெழுமா அ.தி.மு.க.?

14 Mar, 2022 | 12:12 PM
image

(குடந்தையான்)

அண்மையில் நிறைவடைந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 'வலிமையான எதிர்க்கட்சி' என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., ஒரு மாநகராட்சியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

இதனால் கட்சியின் 'இரட்டை தலைமை' மீது தொண்டர்களும், இரண்டாம் நிலை மற்றும் கடைநிலை நிர்வாகிகளும் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. கட்சித் ஆரம்பிக்கப்பட்டதில் ஆளும் கட்சியாகவே அதிக ஆண்டுகள் அக்கட்சி பயணித்திருக்கிறது. 

அவ்வாறிருக்க, முதன்முறையாக கட்சியின் நிரந்தர நட்சத்திர தலைமையான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் மறைவிற்குப் பிறகு தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் 'ஒற்றை தலைமை' உருவாகாததே அ.தி.மு.க.வின் தற்போதைய பின்னடைவிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத தற்போதைய சூழலை பயன்படுத்திக்கொண்டு, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவரில் யார் ஒற்றை தலைமையாக உருவெடுக்கலாம் என்ற போட்டிகள் இல்லாமில்லை.

மூவரும் ஏதேனும் ஒரு வகையில் சமரச உடன்பாட்டை மறைமுகமாக மேற்கொண்டு கட்சியை வழிநடத்தினால், அது அ.தி.மு.க. எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் மக்களின் விருப்பத்திற்குரிய அரசியல் கட்சியாக இயங்குவதற்கு வழிசமைக்கும் ஆனால் இந்த மூவரும் ஒருவருக்கொருவர் குறை குற்றம் கண்டு வெளிப்படுத்திக் கொண்டுள்ளதால், அ.தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து மனம்திறந்த சுய பரிசோதனைக்கு தற்போதைய இரட்டைத் தலைமையிலான அக்கட்சியினர் தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரியவருகிறது. 

அதிகார அரசியலில் எடப்பாடி தொடர்ந்து முன்னேறிக்கொண்டு வருகிறார், இவரது இலக்கை நோக்கிப் பயணத்தில், சசிகலா மூலம் அவ்வப்போது இடையூறையும், தடையும் ஏற்படுத்தி வருகிறார் பன்னீர்செல்வம்.

அண்மையில் கூட தேனி மாவட்ட நிர்வாகிகளை சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற வைத்து, அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் பன்னீர்செல்வம். 

இதனிடையே பன்னீர்செல்வத்தின் அரசியலை நன்கு தெரிந்து வைத்திருக்கும் எடப்பாடிரூபவ் அதனை அவருடைய பாணியிலேயே எதிர்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-13#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54