குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 19 அல்லது 20 ரூபாவால் அதிகரிக்க உத்தேசம்

Published By: Digital Desk 3

14 Mar, 2022 | 10:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பஸ் கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 19 ரூபாய் அல்லது 20 ரூபாவினால் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் யோசனை இன்று அமைச்சரவைக்கு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பிலான முழுமையான விபரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் விளையேற்றத்திற்கமைய பயணிகள்புகையிரத போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை புகையிரத திணைக்களம் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து அமைச்சின் செயலாளரிற்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய தற்போது நடைமுறையில் உள்ள 17 ரூபாய் குறைந்தப்பட்ச கட்டணத்தை 19 அல்லது 20 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண மறுசீரமைப்பு யோசனையை போக்குவரத்து அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பதை தொடர்ந்து  கட்டண மறுசீரமைப்பு தொடர்பிலான முழு விபரங்களும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து புகையிரத கட்டணத்தையும் அதிகரிக்குமாறு இலங்கை புகையிரத திணைக்களம் போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது. புகையிரத சேவை கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புகையிரத சேவைக்கட்டண மறுசீரமைப்பு புகையிரத திணைக்களம் எதிர்க்கொண்டுள்ள நட்டத்தினை ஈடுசெய்யும் வகையில் அமையவில்லை என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54