பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 4

13 Mar, 2022 | 10:18 PM
image

(என்.வி.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருக்கின்றது.

இரண்டு நாட்கள் முழுவதும் திறமையாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ((13) ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 505 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடி குவித்த அபார சதம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பெற்ற அரை சதங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன.

முதலாம் நாள் ஆட்டத்தில் 251 ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 255 ஓட்டங்களைப் பெற்றது. முதலாம் நாள் ஸ்டீவ் ஸ்மித் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார்.

போட்டியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (13) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 2ஆம் நாளன்று முழுவதும் துடுப்பெடுத்தாடியது.

கராச்சி ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதை அறிந்தே அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் இன்னிங்ஸை நிறுத்தவில்லை.

உஸ்மான் கவாஜா 127 ஓட்டங்களிலிருந்தும் இராக்காப்பாளன் நெதன் லயன் பூஜ்ஜியத்திலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களை இரண்டாம் நாள் தொடர்ந்தனர்.

இருவரும் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் நெதன் லயன் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் 3 விக்கெட்கள் வீழ்ந்தன.

ட்ரவிஸ் ஹெட் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கவஜா ஆட்டமிழந்தார்.

ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா 369 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 160 ஓட்டங்களைப் பெற்றார்.

கெமரன் க்றீன் 28 ஓட்டங்களுடன் 7ஆவதாக ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 405 ஓட்டங்களாக இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி, மிச்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் 33 ஓவர்கள் தாக்குப்பிடித்து 8ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவரை சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் கேரி 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மிச்செல் ஸ்டார்க் (28 ஆ.இ.), அணித் தலைவர் பெட் கமின்ஸ் (0) ஆகிய இருவரும் 2 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி இரண்டாம் நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் பாஹீம் அஷ்ரப் 55 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்களையும் சஜித் கான் 151 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31