எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு கலம்போ எவ் சி இளையோர் அணி தகுதி

Published By: Digital Desk 4

13 Mar, 2022 | 02:37 PM
image

(நெவில் அன்தனி)

சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கலம்போ எவ் சி இளையோர் அணி அதிர்ஷ்டவசமாக தகுதிபெற்றது.

சிட்டி லீக் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்ற மொரகஸ்முல்லை இளையோர் அணிக்கு எதிரான மீள் அரை இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கலம்போ எவ் சி இளையோர் அணி தகுதி பெற்றது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கலம்போ எவ் சி 3 - 1 என வெற்றிபெற்றிருந்தது. எனினும் தகுதியற்ற வீரர்கள் விளையாடியதாக இரண்டு அணிகளும் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்ததால் போட்டி ஏற்பாட்டாளர்களினால் அப் போட்டி முடிவு செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகுதியற்ற வீரர்களை தகுதி நீக்கிவிட்டு மீள் அரை இறுதிப் போட்டியை நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்தனர்.

இதற்கு அமைய சனிக்கிழமை நடத்தப்பட்ட மீள் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. அப் போட்டியில் கலம்போ எவ் சி இளையோர் அணி ஆதிக்கம் செலுத்தியபோதிலும் அவ்வணியினால் கோல் போட முடியாமல் போனது.

கலம்போ எவ் சி இளையோர் அணி கோல் போடுவதற்கு எடுத்துக்கொண்ட குறைந்தது 7 முயற்சிகளை மொரகஸ்முல்லை இளையோர் அணி கோல்காப்பாளர் ஷமல் ஷமோத் தடுத்து நிறுத்தயதால் அவ்வணியினால் வெற்றிபெற முடியாமல் போனது.

மறு புறத்தில் மொரகஸ்முல்லை இiளாயோர் அணியின் இரண்டு கோல் போடும் முயற்சிகளை கலம்போ எவ் சி இளையோர் அணி கோல்காப்பாளர் சம்பத் விதுரங்க தடுத்து நிறுத்தினார்.

போட்டியின் கடைசி 15 நிமிடங்களில் கடும் மழை பெய்து மைதானத்தில் ஆங்காங்கே நீர் நிறைந்ததால் வீரர்கள் பந்தை நகர்த்திச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

போட்டி முடிவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது மழை ஒய்ந்தது. தொடர்ந்து போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மத்தியஸ்தர் தரங்க புஷ்பகுமார பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.

கலம்போ எவ் சி சார்பாக அணித் தலைவர் நிக்சன் அன்தனி, எம். இல்ஹாஸ், எம். லபார், எம். காலிக், சச்சின் விமுக்தி ஆகியோர் 5 பெனல்டிகளையும் கோலினுள் புகுத்தினர்.

மொரகஸ்முல்லை சார்பாக பன்சிலு நெமிதர, ரி. அஷன்த, எஸ். பெரேரா ஆகியோர் பெனல்டிகளை கோலினுள் புகுத்தினர். அணித் தலைவர் நவோத் லக்ஷித்தவின் பெனல்டியை கலம்போ எவ் சி கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஜாவா லேன் இளையோர் அணியை கலம்போ எவ் சி இளையோர் அணி எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49