ராஜபக்ஷ அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும் : நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகும் ஜே.வி.பி.

Published By: Digital Desk 4

13 Mar, 2022 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊழல் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் அந்த தீர்மானத்தை எடுக்கப் போவதில்லை. எனவே அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 5 சந்தர்ப்பங்களில் பிரதமராக பதவி வகித்திருக்கின்றார்.

அவரால் நாட்டுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது? அவரது சர்வதேச தொடர்புகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் பெற்றுக் கொண்ட உதவிகள் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ள ஜே.வி.பி. , பிரதமர் பதவியில் மாற்றங்களைக் கொண்டு வருவதால் நாட்டின் தற்போதைய நிலைமையில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிக்கையில் ,

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை சிறந்த தீர்மானமாகும். எனினும் இந்த தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டிய காலம் கடந்துள்ளது.

குதிரை சென்ற பின்னர் லயத்தை மூடுவது பிரயோசனமற்றது. நாட்டின் பொருளாதாரம் கயிறு அறுந்த பட்டம் போல் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

ரூபாவின் பெறுமதி வீழச்சி மேலும் பாரதூரமானளவில் அதிகரிக்கும். இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவர்.

உலக சந்தையில் எரிபொருள் வீழச்சியடைந்தமையின் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை. மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள ஏனைய உறுப்பினர்கள் இந்த நிலைமையை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை நிர்வகித்த அனைத்து ஆட்சியாளர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ள ராஜபக்ஷர்களால் ஏதாவதொரு பொய்யைக் கூறி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முடியுமே தவிர , வேறொன்றையும் செய்ய முடியாது. நாட்டை இவ்வாறு வங்குரோத்தடையச் செய்துள்ள அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை ஒருபோதும் எடுக்காது. எனவே இவர்கள் பதவி விலகும் வரை அதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டும்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ்வாரம் முதல் நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

அதற்கமைய 17 ஆம் திகதி களுத்துறையிலும் , 18 ஆம் திகதி கொழும்பிலும் , 29 ஆம் திகதி பொலன்னறுவையிலும் என அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

ஓரிரு மாதங்களில் மாயாஜாலம் செய்து நிலைமையை சரி செய்ய முடியாது. எனினும் நாம் அதிகாரத்தைக் கைப்பற்றினால் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களுடன் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவிக்கையில் ,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பலவீனமடைந்துள்ளார். அவர் பதவி நீக்கப்பட்டால் பிரிதொரு ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார்.

அதனை தவிர நாட்டில் வேறு எந்த மாற்றமும் இடம்பெறாது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வதேச தொடர்புகள் காணப்படுகின்றன.

அவை நட்பு ரீதியிலானதாகும். அந்த தொடர்புகளின் மூலம் நாட்டுக்கு ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலரையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என்று சவால் விடுக்கின்றோம்.

5 சந்தர்ப்பங்களில் நாட்டின் பிரதமராக பதவி வகித்த அவர் என்ன செய்திருக்கிறார்? பதவியில் மாற்றங்களைக் கொண்டு வருவதால் எதனையும் சுலபமாக மாற்றிவிட முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47