அரசாங்கத்தை துரத்தியடிக்க போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் : மக்கள் அமைதி காப்பது நாட்டுக்கு ஆபத்து - அநுரகுமார 

13 Mar, 2022 | 10:54 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை மிகவும் மோசமான முறையில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். 

இதற்கு தலைமை வகிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது. இனிமேலும் மக்கள் அமைதியாக இருப்பது நாட்டுக்கு ஆபத்தாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது. 

எனினும் இறக்குமதி செலவு 20 பில்லியன் டொலர்களாகும். இவ்வாறான ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளிக்கு மத்தியில் டொலரின் பெறுமதி 270 ஆக உயர்வடைந்துள்ளது. 

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இலங்கை தற்போது பாரிய பொருளாதார அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளது.

சிம்பாப்வே மற்றும் லெபனான் போன்ற நாடுகள் ஆரம்பத்தில் இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற போது , அங்குள்ள இராணுவத்தினருக்குக் கூட வெளிநாடுகளிலிருந்து உணவை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

எனினும் இலங்கை இன்னும் அந்த மட்டத்திற்குச் செல்லவில்லை. சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் அந்த நாடுகளில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் அவர்களது வீட்டு நிலத்தை சுத்தப்படுத்த உதவுமே தவிர, பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்தவகையிலும் தீர்வாக அமையாது.

கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிதி அமைச்சர் இதுவரையிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை.

இவ்வாறு மிகவும் மோசமான முறையில் நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். 

இது ராஜபக்ஷ குடும்பத்தின் நாடு அல்ல. பஷில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்காவிலேயே உள்ளனர். இவர்கள் தமது தொழிலுக்காக இங்கு தங்கியுள்ளனர்.

தற்போது எம்மிடம் காணப்படும் கைவிட முடியாத பொறுப்பு இவர்களிடமிருந்து நாட்டை மீட்பதாகும். 

பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு செல்வதற்கு இரு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இந்தியா அதனை நிராகரித்துவிட்டது. 

தற்போதும் மூன்றாவது முயற்சியாக மிண்டும் இந்தியா செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எது எவ்வாறிருப்பினும் மக்கள் இனிமேலும் அமைதியாக இருக்கக் கூடாது. அரசாங்கத்தை துரத்தியடிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45