இதய ஆரோக்கிய பரிசோதனையில் சிறந்தது எது ?

12 Mar, 2022 | 05:50 PM
image

எம்மில் பலரும் ஏதேனும் ஒரு தருணத்தில் நெஞ்சுப்பகுதியில் சிறிய அசௌகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவார்கள். 

இந்த தருணத்தில் மருத்துவர்கள் இருதயத்தின் இயங்கு திறன் தொடர்பாக Echo & Treadmill டெஸ்ட் செய்ய வேண்டும் என பரிந்துரைப்பார். 

இந்நிலையில் எம்மில் பலருக்கும் இந்த இரண்டு வகையான பரிசோதனையும் செய்ய வேண்டுமா? அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டுமா? அல்லது எதை உறுதியாக செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் எழும்.

முதலில் இந்த இரண்டு வகையான பரிசோதனைகளின் மூலம் இதயத்தின் இயங்கு திறனை குறித்த பல்வேறு துல்லியமான விடயங்களை அவதானிக்க இயலும். 

What happens during a heart attack?

எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை என்றால் எம்முடைய இதயத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வர். 

இதில் கதிர்வீச்சு அபாயம் இல்லாததால் கர்ப்பிணி பெண்களும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

இந்த பரிசோதனையில் இதயத்தின் நான்கு பிரதான அறைகள், அவற்றின் அமைப்பு, அவற்றில் ஏதேனும் பலவீனமாக இருக்கிறதா? என்பதை அறியலாம். 

இதயத்தில் நான்கு அறைகள் மற்றும் ரத்த நாளங்களின் சுவர்கள் இயல்பான அளவுடன் கூடிய தடிமனுடன் இருக்கிறதா? அல்லது கூடுதலான தடிமனுடன் இருக்கிறதா? என்பதை காண இயலும். 

இதய பாதிப்புக்கு இத்தகைய சுவர்களின் தடிமனும் காரணம் என்பதால் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இத்தகைய பரிசோதனை அவசியம்.

அதனைத் தொடர்ந்து இதயத்தின் நான்கு அறைகளிலிருந்து ரத்தம் வெளியேறுவதற்கான வால்வு எனப்படும் குழாய்கள், அதன் தன்மை, அதன் இயங்கு திறன் ஆகியவற்றையும் இத்தகைய பரிசோதனை மூலம் கண்டறியலாம். 

இத்தகைய வால்வுகளில் அடைப்பு அல்லது ஏதேனும் பாதிப்பு இருந்தால், அதனை துல்லியமாக அவதானிக்கலாம். இதன் மூலம் இதயத்திலுள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிடலாம். 

இதன் மூலம் இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு குருதி வெளியேறும் இயக்கத்தையும் கண்டறியலாம்.

டிரெட்மில் பரிசோதனை என்பது நாம் இயல்பாக கண்டறியும் இ சி ஜி முறை தான்.

இதன் மூலம் எம்முடைய இதய துடிப்பை கண்டறிய இயலும். மாரடைப்பு ஏற்படும் போது இத்தகைய இதயத் துடிப்பிற்கான ஈசிஜியில் மாற்றம் ஏற்படும். அரித்மியா எனப்படும் இதயத்துடிப்பு, இயல்பான அளவில் துடிக்கிறதா? அல்லது சமச்சீரற்ற தன்மையில் துடிக்கிறதா? சமச்சீரற்ற தன்மையில் இருக்கிறது என்றால், அது எப்போது நிகழ்கிறது? என்பதனை இத்தகைய பரிசோதனையின் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம். 

மாரடைப்பு ஏற்படுமா? ஏற்படாதா? ஏற்பட்டால் எப்போது ஏற்படக்கூடும்? எதனால் ஏற்படக் கூடும்? அடைப்பு ஏதேனும் இருக்கிறதா? அல்லது ரத்தக்குழாய்கள் பலவீனமடைந்து, சுருக்கமடைந்திருக்கிறதா? என்பதையும் இத்தகைய பரிசோதனையின் மூலம் அவதானிக்கலாம்.

பொதுவாக இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் 90 முதல் 95 சதவீத அளவிற்கு அடைப்பு ஏற்பட்ட பிறகுதான் மாரடைப்பு உண்டாகிறது. 

இத்தகைய ட்ரெட்மில் பரிசோதனையின்போது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு 50 முதல் 60 சதவீதம் ஏற்பட்டிருந்தாலே கண்டறிய இயலும். 

அதனைத் தொடர்ந்து உரிய சிகிச்சைகள் மூலம், அந்த அடைப்பை நீக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ரத்த சர்க்கரையின் அளவு சமச்சீரற்ற தன்மையில் இருப்பவர்கள் ஆண்டுதோறும் ஒருமுறையேனும் இதய ஆரோக்கியம் தொடர்பான டிரெட்மில் பரிசோதனையை மேற்கொள்வது நலம்.

டொக்டர் வினோத் குமார்

(தொகுப்பு அனுஷா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04