அரச கொள்கைகளுக்கு எதிராக 25 ஆம் திகதி சத்தியாக்கிரகம் : அனைத்து கட்சிகளுக்கும் ஐ.தே.க. அழைப்பு

12 Mar, 2022 | 05:54 PM
image

(எம்.மனோசித்ரா)


நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது. 

இதில் எவ்வித பேதமும் இன்றி அனைத்து கட்சிகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்கள் தொடர்பான அறிவுடன் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டும். 

அவ்வாறான அறிவும் அனுபவமும் மிக்க, சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார பேரவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் மாலை 3 மணிக்கு பாரிய சத்தியாக்கிரகம் ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிருந்து மீள்வதற்கும் , நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கும் ஒரே நிலைப்பாட்டினை எட்டுவதற்கு அனைத்து கட்சிகளையும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். 

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.தே.க. முன்னெடுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

நாட்டின் பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்குமாக தேசிய கொள்கையை ஸ்தாபித்து , பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இரும்பு சட்டகமொன்றை உருவாக்க வேண்டும். 

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை, எனினும் இந்த அரசாங்கம் எதற்காக அதிலிருந்து பின்வாங்குகிறது என்பது எமக்கும் தெளிவின்றியுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தில் காணப்பட்ட குறைபாடுகளே நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணமாகும். 

அத்தோடு இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இது பொறுத்தமற்ற தீர்மானமாகும்.

இவ்வாறான நெருக்கடி நிலைமைகளின் போது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார பேரவையில் அவரையும் உள்வாங்கி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02