சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் மரணம்

12 Mar, 2022 | 08:47 PM
image

சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் ஆர்ஜென்டினாவில் பிறந்தவர்.

பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.

சேகுவேரா

அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் கடந்த 1967 ஆம் ஆண்டு கைது செய்தது.

காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கம்யூனிஸ்ட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த அப்போதைய பொலிவியா ஜனாதிபதி ரேனே பாரியன்டோஸ், சேகுவேராவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார்.

அதனை நிறைவேற்ற இராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி இராணுவ வீரர் மரியோ, சேகுவேராவை சுட்டுக் கொன்றார்.

மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்

இது தொடர்பாக மரியோ அப்போது கூறுகையில்,

சேகுவேராவை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவரது ஒளி பொருந்திய கண்களை பார்த்து மிகவும் தடுமாறியதாகவும், அதற்கு சேகுவேரா, நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதற்றமின்றி செயல் படுங்கள்’ என ஆறுதல் கூறினார் என்றும் தெரிவித்தார்.

30 ஆண்டுகள் பொலிவியா இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மரியோ அதன்பிறகு பத்திரிகையாளர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்.

தற்போது இராணுவ வீரர் மரியாவுக்கு 80 வயதான நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52