(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில்  மட்டக்களப்பு நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு வாராந்தம் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும், அரசாங்கமே ஏன் மௌனம் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த உத்தரவிட்டு, தோட்டங்களை கூட்டுறவு சங்க அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும்,  உழைப்பைத் தருகின்றோம் எங்கள் ஊதியம் எங்கே?,  காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்கங்களே உடனே விலகிப்போ. போன்ற பதாதைகளை தாங்கியும் கோஷங்களையும் எழுப்பியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.