வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக உள்ள காணிப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - காணி அமைச்சர் உறுதி

Published By: Digital Desk 4

11 Mar, 2022 | 08:43 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு கிழக்கில் 30வருடமாக இருந்துவந்த யுத்தம் காரணமாக அங்குள்ள அதிகமான காணிகளுக்கு உரிமை இல்லை. அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்போம் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திசேன தெரிவித்தார்.

அடக்கம் செய்ய இடமளிப்பதை விரும்புகிறார் காணி அமைச்சர் | தினகரன்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) காணி அபிவிருத்திச் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கில் இடம்பெற்ற 30வருடகால விடுதவைப்புலிகளின் யுத்தம் காரணமாக அங்குள்ள அதிகமானவர்களுக்கு காணி உரிமை இல்லை. யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று குடியிருந்துவிட்டு தற்போது நாட்டுக்கு வந்து, அவர்களின் காணிகளை கேட்கின்றனர். இதனால் பாரிய பிரச்சினை இருந்து வருகின்றது. 

அதனால் உரிமையாளர்களுக்கும் அபிவருத்திக்கும் காணிகளை வழங்குவதற்கு இந்த திருத்தம் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதனால் வடக்கு கிழக்கு காணி பிரச்சினைக்கும் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தம் மூலம் தீர்வுகாண எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருந்துவரும் காணி பிரச்சினை தொடர்பாக அந்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருக்கின்றோம். காணி உரிமை பத்திரம் இல்லாவிட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ வங்கிகளில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளவோ முடியாது. அதனால் இலங்கை பிரஜைகள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயருக்கு காணித்துண்டு ஒன்றை வழங்கத்தின் கொள்கையாகும். அதனை மேற்கொள்வதற்கே தற்போது காணி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அத்துடன் குடும்பத்தில் பெற்றோர்கள் மரணித்தால் அந்த காணி உரிமை குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைக்கே உரித்தாகின்றது.

ஆனால் தற்போது செய்திருக்கும் திருத்தம் மூலம் குடும்பத்தில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் அந்த உரிமை கிடைக்கின்றது. 87வருடங்களுக்கு பின்னரே பெண்களுக்கு இந்த உரிமை கிடைக்கின்றது. பல்வேறு உரிமை மீறல்களுக்கு ஜெனிவா செல்கின்றனர். ஆனால் 87வருடமாக அடிப்படை உரிமை பெண்களுக்கு மீறப்பட்டிருந்தது. அதற்காக யாரும் ஜெனிவா செல்லவில்லை.

அத்துடன் நாட்டில் நீதிமன்றங்களில் இருக்கும் அதிகமான வழக்குகள் காணி தொடர்பான பிணக்குகளாகும். காணி பிரச்சினையே உறவினர்கள், பிள்ளைகளுக்கிடையில் இருந்துவரும் சச்சரவுகளுக்கு காரணமாகும். அதனால் இந்த திருத்தம் மூலம் இவ்வாறான பிரச்சினைகள் குறைவடையும்.

அதேபோன்று காணி பிரச்சினை சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்டகாலத்துக்கு இழுபட்டு செல்கின்றன. அதனால் காணி தொடர்பான வழக்குகளுக்கு சட்டத்தரணிகள் அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்கு அதிகம் சம்பாதித்துக்கொள்ளலாம். என்றாலும் இந்த திருத்தம் மூலம் காணி தொடர்பான வழக்குகள் குறைவடையும், எனக்  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51