ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் இலண்டனை சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

வாழ்கையினை மாற்றுவதில் பெண்களுக்கே பெருமை என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வடக்கு இலண்டனில் உள்ள துர்ஹம் மற்றும் டார்லிங்டன் ஆகிய நகர்களை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள், தங்களது அன்றாட வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவும், தாம் வசிப்பதற்கு  ஒரு வதிவிடத்த தேவையின் நிமிர்த்தமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இலண்டனுடன் ஒப்பிடுகையில், துர்ஹம் மற்றும் டார்லிங்டன் ஆகிய நகரங்களில் மட்டும் 200 பாலியல் தொழிலாளிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த எண்ணிக்கையானது மிகவும் அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர், வடக்கு இலண்டனை சேர்ந்த சுமார் 1,000 பாலியல் தொழிலாளிகளுக்கு குறைந்த அளவிலேயே வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சில பெண்கள் போதை பொருள் மற்றும் மதுவிற்கு அடிமையாகி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர், இன்னும் பல பெண்கள் வசிப்பதற்கு இருப்பிடம் தேடி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின் போது பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியதாவது, நாள் முழுவதும் இந்த தொழிலில் ஈடுபட்டதற்கு வெறும் 10 பவுண்ட்ஸ் மட்டுமே எனக்கு கிடைத்தது. ஆனால் எனக்கு தேவைகள் இருந்ததால் இந்த தொகையை நான் பெற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த ஆய்வினை மேற்கொண்ட தலைமை அதிகாரி ஸ்டீபன் பெல் கூறியதாவது, நம்மிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் நாம் அனைவரும் குளத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமக்குள் மறைத்துவைத்துக்கொண்டோம். கற்கள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கையினை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வதிவிடத்திற்காய் இதுபோன்ற ஒரு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்த அளவு தொகை கொடுப்பதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாலியல் தொழிலாளிகள் தங்களுக்கு நடக்கும் முறைகேடுகள் பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கவும் தயங்குகின்றனர்.

இதற்கு காரணம், இத்தொழிலாளிகளை பொலிஸார் நடத்தும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கும். இவை அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

இக்காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும், வன்முறைகளையும் கண்கூடாக பார்த்து வளர வேண்டிய சூழ்நிலைக்கு பெண்கள் மட்டுமல்ல ஏராளமான இளைஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் எதிர்காலம் பாதிப்படைகின்றது.

தற்போது நடத்தப்பட்ட இந்த ஆய்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. இதனை ஒரு துருப்பாக எடுத்துக்கொண்டு அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளார்.