கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் எதற்காக தனியான செயலணி வேண்டும் - ரவூப் ஹக்கீம்

Published By: Digital Desk 3

11 Mar, 2022 | 12:48 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் தனியான செயலணி அமைத்து அந்த பிரேதேசத்தில் தொல்பொருள் தொடர்பாக அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும் இந்த செயலணியுடன்  பாதுகாப்பு பிரவினரும் செல்வதால் பிரதேச மக்கள் குழப்பமடைகின்றனர். அதனால் தொல்பொருள் தொடர்பாக அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் ஆரம்பமாக அந்த பிரதேச மக்களுடன் அதுதொடர்பில் கலந்துரையாடவேண்டும். அத்துடன் அம்பாறை முள்ளிகுளம் பிரதேசத்தில் சிலை ஒன்றை வைப்பதற்கு எடுத்த முயற்சி கவலையளிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை பிரதேசத்தில் முள்ளிகுளம் என்ற மலைமேடு ஒன்று இருக்கிறது. அந்த இடத்துக்கு தேரர்கள் சிலரும் பாதுகாப்பு படையினர் சிலரும் வேறு சிலரும் நேற்று (நேற்று முன்தினம்) காலை அங்கு சென்று திடீரென கட்டுமான வேலை ஒன்றை ஆம்பிக்க முற்பட்டபோது பிரதேச மக்கள் குழப்பமடைந்தனர். 

தொல்பொருள் திணைக்களம் அந்த இடத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இருப்பதாக இருந்தால் அதுதொடர்பாக அந்த பிரதேச மக்களுடன் கலந்துரையாடவேண்டும். பிரதேச சபையுடன், பிரதேச செயலகத்துடன் கலந்துரையாடவேண்டும். அவ்வாறு இல்லாமல் திடீரென அந்த இடத்துக்குவந்து கட்டுமான வேலை ஆரம்பிக்கின்றனர். அந்த இடத்தில் சிலை ஒன்றையோ வேறு ஏதாவது ஒன்றை வைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

அதேபோன்று இறக்காமம் பிரதேசத்தில் மாயக்கல்லி பிரதேசத்தில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் வேறு கட்டுமானம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தொல்பொருள் திணைக்களம் குறித்த இடத்தில் அகழ்வு இருக்கின்றதா? அந்த இடம் வர்த்தமானி படுத்தப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அந்த பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். 

அவ்வாறு தொல்பொருள் இருந்தால் இலங்கையர் என்றவகையில் அதனை பாதுகாக்க நாங்களும் கடமைப்பட்டுள்ளோம். என்றாலும் அந்த பிரேதேசத்தில் கண்ணுக்கு காண்கின்ற தூரத்தில் ஒரு சிங்கள குடும்பம் இல்லாத நிலையில் இவ்வாறான கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சி தொடர்பில் கவலையடைகின்றோம். அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக மாவட்ட அதிபருக்கும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். அவரும் விசாரணை மேற்கொள்ளவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் தொல்பொருள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இருக்கும் திணைக்களம் அவர்களின் கடமையை வெளியாட்களுக்கு வழங்கமுடியாது. அதேபோன்று கிழக்கு மாகாணத்துக்கு தனியான செயலாணி அமைக்கப்பட்டிருக்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம்தான்  தொல்பொருள் இருக்கின்றதா. வேறு மாகாணத்தில் தொல்பொருள் இல்லையா? கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் தனியான செயலணி அமைத்து, அதில் ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமித்துக்கொண்டு அந்த இடங்களுக்கு செல்கின்றனர்.

 அவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவ பிரதானிகள் செல்கிறார்கள். இவ்வாறு ஒரு மதத்தை, இனத்தை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58