உக்ரேன் மோதல் : சுமி நகரிலிருந்து இந்திய மாணவர்கள் மீட்பு

11 Mar, 2022 | 08:38 PM
image

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேன்  நகரான சுமியில் இருந்து 650க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுமி  நகர் கல்வி நிறுவனங்களின் மையமாக உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்களின் தாயகமாகவும் இந்த நகர்  காணப்படுகின்றது.

கடந்த பல நாட்களாக ரஷ்யர்களுக்கும்  உக்ரேனியப் படைகளுக்கும் இடையே கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் தீவிர துப்பாக்கிச் சூடுகளினால் பெரும் அச்சுறுத்தலை சுமி நகர் எதிர்க்கொண்டு வருகின்றது.

Fighting and explosion in a flat in Sumy, Ukraine. [24/02/2022] :  r/CombatFootage

இந்த நிலையில்  இந்தியர்களும் பிற சர்வதேச மாணவர்களும் வெளியேற்றுவதில் பல  சவால்கள் எழுந்தன்.

அத்துடன்  சமூக வலைத்தளங்களில் போர் குறித்தும் சுமி நகரில் உள்ள ஆபத்து குறித்தும் பதிவுகள் கூடுதலாக வெளிவந்தன. ஒரு கட்டத்தில்  மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவது கூட கடினமான பணியாக மாறியுள்ளது.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரேன்  ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மதிக்கத் தவறிவிட்டன. 

PM Modi Holds Another High-Level Meeting On Ukraine Russia Crisis

அவ்வறானதொரு நிலைமையில் மார்ச் 7 ஆம் திகதி  மாணவர்களை வெளியேற்றுவதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து வெளியேற்றும் பணி கைவிடப்பட்டது.

இருப்பினும், தகவல்தொடர்பு வழிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடமிர் புடின் மற்றும் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரிடமும் கலந்துரையாடினார். அப்போது இரு தலைவர்களும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உறுதியளித்தனர்.

As shelling continues, Indian students struggling in Sumy await evacuation  | The News Minute

மறுபுறம், வெளிவிவகார அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளின்  வெளிவிவகார அமைச்சர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ரஷ்யா மற்றும் உக்ரேன்  மற்றும் அதன் அண்டை நாடுகளின் தூதர்களுடன் டில்லியில் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மாணவர்களை வெளியேற்ற கலந்துரையாடப்பட்டது. உக்ரேனுக்கான இந்திய தூதவரர் மற்றும் அவரது பணியாளர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

மேலும் இந்த பணியில் இந்திய பாதுகாப்பு அமைச்சும் இணைக்கப்பட்டது.

Watch videos: Batches of Indian students enter Hungary from Ukraine for  return to India by Air India flight

சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் உக்ரேனின் இருபுறமும் ரஷ்ய எல்லையிலும் செய்யப்பட்டது.

கடும் போராட்டத்திற்கு மத்தியில் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் மனிதாபிமானப் பாதை உருவாக்கப்பட்டது. 

மாணவர்கள் பேருந்துகளில் ஏறி  பாதுகாப்பாக பொல்டாவை அடைந்தனர், சிறப்பு விமானங்கள் நாட்டை வந்தடைந்தனர். சுமார் 20,000 குடிமக்களை இந்தியா மீட்டெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08