இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை 

11 Mar, 2022 | 11:01 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு எதிராக அன்டிகுவா நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நிக்ருமா பொனர் குவித்த நிதானமான சதத்தின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 62 ஓட்டங்களால் முன்னிலை அடைந்துள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவின்போது மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மிகவும் பொறுமையுடன் 9 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடிய நிக்ருமா பொனர் 355 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

Nkrumah Bonner walks off after making a nine-hour 123, West Indies vs England, 1st Test, Antigua, 3rd day, March 10, 2022

நான்கு விக்கெட்கள் இழப்புக்கு 202 ஓட்டங்களில் இருந்து தனது முதல் இன்னிங்ஸை 3ஆம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள், முழு நாளும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மேலதிகமாக 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இங்கிலாந்தை குழப்பத்தில் ஆழ்த்தியது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் ஜேசன் ஹோல்டர் (45), ஜொஷவா ட சில்வா (32), அல்ஸாரி ஜோசப் (15) ஆகியோரின் விக்கெட்களை இங்கிலாந்து கைப்பற்றிய போதிலும் அதன் பின்னர் நீண்ட நேரத்துக்கு விக்கெட் விழவில்லை.

Dan Lawrence finally prised out Nkrumah Bonner via a review, West Indies vs England, 1st Test, Antigua, 3rd day, March 10, 2022

நிக்ருமான பொனரும் கெமர் ரோச்சும் 28.5 ஓவர்கள் நின்றுபிடித்து துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தினர்.

கெமர் ரோச்சுடன் 8ஆவது விக்கெடடில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிக்ருமான பொனர், 9ஆவது விக்கெட்டில் வீராசாமி பேர்மோலுடன் 27 ஓவர்களில் 46 பகிர்ந்து ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர முடிவில் வீராசாமி பேர்மோல் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். கடைசி ஆட்டக்காரர் ஜேடன் சீல்ஸ் ஓட்டம் பெறாமல் இருந்தார்.

Mark Wood left the field with an elbow injury, West Indies vs England, 1st Test, Antigua, 3rd day, March 10, 2022

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 311 (ஜொனி பெயார்ஸ்டோவ் 140, பென் ஃபோக்ஸ் 42, பென் ஸ்டோக்ஸ் 36, கிறிஸ் வோக்ஸ் 28, ஜேடன் சீல்ஸ் 79 - 4 விக்., ஜேசன் ஹோல்டர் 24 - 2 விக்., அல்ஸாரி ஜோசப் 70 - 2 விக்., கெமர் ரோச் 86 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 373 - 9 விக். (நிக்ருமான பொனர் 123, க்ரெய்க் ப்றத்வெய்ட் 55, ஜேசன் ஹோல்டர் 45, ஜோன் கெம்பல் 35, பென் ஸ்டோக்ஸ் 42 - 2 விக்., க்ரெய்க் ஓவர்ட்டன் 85 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31