மருந்துப் பொருட்கள், பிள்ளைகளுக்கு தேவையான உணவுவகைகள் இல்லாமல்போகும் -  ஹர்ஷ டி சில்வா 

Published By: Digital Desk 3

10 Mar, 2022 | 04:55 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் மக்களுக்கு தேவையான காஸ், மின்சாரம், எரிபொருள் இல்லை. இதுதொடர்பாக பதிலளிக்க அமைச்சர் ஒருவர் இல்லை.

அப்படியாயின் நாடு வங்குராேத்து என்று சொல்லாமல் என்ன என்று சொல்வது ? அத்துடன் மிகைவரி சட்டமூலத்தில் இருந்து ஊழியர் சேமலாப நிதியம் நீக்கப்படுவதான அறிவிப்பை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வேலையாட்கள் நட்டஈடு(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கவேண்டி இருக்கின்றது. இவ்வாறான நிலையில் நாடு வங்குரோத்து ஆகவில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

நாட்டில் எரிபொருள் நிரப்ப பல மணிநேரம் காத்திருக்கவேண்டும் என்றால், மக்களுக்கு மின்சாரம் இல்லை, இதுதொடர்பாக பதில் அளிக்க அமைச்சர் இல்லை. அப்படியாயின் நாடு வங்குராேத்து என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது. இந்த நிலை வங்குரோத்து இல்லையென்றால் வங்குரோத்து என்றால் என்ன?

அத்துடன் மத்திய வங்கியி அறிக்கையில், வெளிநாட்டு சொத்துக்களின் கையிருப்பு மரை பெறுமானத்திலேயே இருக்கின்றது.மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்களைவிட மத்திய வங்கியின் வெளிநாட்டு பொறுப்புக்கள் 2,5பில்லியன் டொலர் அதிகமாகும். அப்படியாயின் மத்திய வங்கியும் வங்குராேத்து. 

இதனை வெளிப்படுத்தி தெரிவிக்கமுடியாது. ஏனெனில் எங்களுக்கும் கெளரவம் இருக்கின்றது. நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாங்கள் இலங்கையர். நாங்கள் பிறந்ததும் இங்குதான் இறப்பதும் இங்குதான். இந்த நாட்டில் எங்களுக்கு 2 கடவுச்சீட்டுக்கள் இல்லை. 

அதனால் வங்குராேத்து நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கம் முன்வைக்கும் சிறந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள் நாங்களும் சில யோசனைகளை அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றோம். 

அத்துடன் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை சந்தித்து கலந்துரையாடினோம். எதிர்க்கட்சி மத்திய வங்கி ஆளுநலை சந்தித்து பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியது இதுவே முதல்தடவையாகும். 

நாங்கள் உலகளாவிய பொருளாதார வாழ்கின்றோம். அப்படியாயின் எமது வியாபாரிகளுக்கு போட்டியிட முடியுமான வச்திகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். தேசிய வர்த்தகர்களை பலப்படுத்த அவர்களின் வர்த்தக சந்தையை பிரசாரப்படுத்தவேண்டும். அதற்கு நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் ஜனவரி மாதம் 500 மில்லியன் பிணைமுறி வழங்கவேண்டி இருந்தபோது கடன் தவணையை செலுத்துவதற்கு கால அவகாசம் கேகுமாறு தெரிவித்தோம். ஆனால் அரசாங்கம் அந்ம கடன் தவணையை செலுத்தியதால் நாட்டின் வெளிநாட்டு செலாவணி இல்லாமல் போனதுடன் அதன் மூலம் பலரும் நன்மை அடைந்தனர். 

அதேபோல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1,000 மில்லியன் டொலர் பிணை ஒன்றை செலுத்தவேண்டி இருக்கின்றது. அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல்போகும்.

மருந்து பொருட்கள் இல்லாமல்போகும் பிள்ளைகளுக்கு தேவையான உணவுவகைகள் இல்லாமல்போகும். பிள்ளைகளுக்கு உணவு பெற்றுக்கொடுக்க முடியாமல் கடந்த வாரம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது எமக்கு தெரியும். 

அத்துடன் மிகைவரி சட்டமூலத்தில் இருந்து ஈபீஎப். ஈடிஎப் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இந்த அறிவிப்பை அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தெரிவிக்கவேண்டும். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றில்  ஊழியர் சேமலாப நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு ஊழியர்கள் இரண்டுபேரை நியமிப்போம். 

அதேபோன்று ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சயடைந்து செல்கின்றது. அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்று 230 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றபோதும் வெளியில் டொலர் ஒன்று 260 தொடக்கம் 290 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அப்படியாயின் எவ்வாறு பொருளாதாரத்தை முன்னெடுப்பது. 

இதுதொடர்பாக நிதி அமமைச்சர் பாராளுமன்றத்துக்கு வந்து தெளிவுபடுத்தவேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சிகளை அழைத்து கட்சிபேதமில்லாமல் தீ்ர்மானம் மேற்கொள்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36