பதுளை உடுவரையில் 18 வயது மாணவி கொலை - சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

10 Mar, 2022 | 12:28 PM
image

பதுளை உடுவரை பெருந்தோட்ட (நேப்பியர்) கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொமூடூரக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் 09-03-2022நேற்று மாலை ஆஜர் செய்யப்பட்டார்.

இதையடுத்து நீதிபதி சமிந்த கருணாதாச, சந்தேக நபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், தொடர்ந்து புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஹாலி-எலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

கடந்த 08-03-2022 ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்மராஜா நித்தியா, கோடரியினால் தாக்கப்பட்டு, கோரமாகக் கொலை செய்யப்பட்டார். 

இதையடுத்து சந்தேக நபராக இனம் காணப்பட்ட இராமையா திபாகரன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து குறித்த  நபரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

 இதையடுத்து நேற்று 09-03-2022 அதிகாலை உடுவரை ரயில் நிலையத்திற்கு பின்புறமாக பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அந்த நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது காதலுக்கு சாதகமான பதில் வழங்காமல், தன்னை நித்தியா ஏமாற்றியதால், ஆத்திரம் கொண்ட நான் கோடரியினால் தாக்கி கொலை செய்தேன் என்று உறுதியாகக் கூறினார். 

மேலும் குறித்த நபரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டப் பின்னர், ஹா-லிஎலைப் பொலிசார் அவரை நேற்று மாலை பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்திருந்த நிலையில், குறித்த  சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை, விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49