உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : மைத்திரியின் மேன்முறையீடு விசாரணைகளுக்கு ஏற்பு

Published By: Digital Desk 4

09 Mar, 2022 | 09:11 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

போதுமான உளவுத் தகவல்கள்  கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி,  6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 109 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அந்த நீதிமன்றம் புதன்கிழமை (9) தீர்மானித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான  விசாரணைக்கு திகதி அறிவிப்பு | Virakesari.lk

 இது குறித்த மேன்முறையீட்டு மனு புதன்கிழமை (9) மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு  மேல் நீதிமன்றின் நீதிபதிகளான பிரான்க் குணவர்தன மற்றும்  மஹேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன், இந்த மேன் முறையீட்டு மனு மீதான விசாரணைகள் குறித்த வாதங்களை  எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

போதுமான உளவுத் தகவல்கள்  கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 109 பேர், 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் அவற்றை தள்ளுபடி செய்து தம்மை குற்றச் சாட்டுக்கலிலிருந்து விடுவிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில்  இந்த சிவில் மேன் முறையீட்டு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.

 கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிகா டி  அல்விஸ், குறித்த வாதத்தின் அடிப்படையிலான கோரிக்கையை  ஏற்கனவே நிரகாரித்த நிலையில், அந்த தீர்மானத்தை திருத்தி உத்தரவு பிறப்பிக்குமாறே இந்த மேன் முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2021 நவம்பர் 29 ஆம் திகதி,  மாவட்ட நீதிமன்றில் உள்ள குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன் வைத்திருந்தார். இதன்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கடந்த 2022 ஜனவரி 7 ஆம் திகதி நீதிமன்றம் தனது  உத்தரவை  அறிவித்து பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக அறிவித்தது. 

இந் நிலையிலேயே அதற்கு எதிராக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றில் மேன் முறையீடு செய்துள்ளார்.

போதுமான உளவுத் தகவல்கள்  கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,  அவை ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறுமதி 1250 மில்லியன் ரூபாவாகும்.

 உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி,  கட்டுவபிட்டிய தேவாலயம் மீது நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 180 பேர்  நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 109 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்குகளிலும் பிரதிவாதிகளாக,

முன்னள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையும் முன்னாள் பணிப்பாளரும்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகள்க பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51