டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தார் ஜடேஜா

Published By: Vishnu

09 Mar, 2022 | 05:57 PM
image

ஐ.சி.சி.யின் அண்மைய டெஸ்ட் கிரிக்கெட்டின் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.

Jadeja

மொஹாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியீட்டியமைக்கு ரவீந்திர ஜடேஜாவின் செயல்திறன் முக்கிய பங்காற்றியது.

இதனால் அவர் பட்டியலில் நம்பர் வன் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையுடனான போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களை எடுத்தார் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு எதிரான இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பங்காற்றினார்.

இதன் மூலம் பட்டியலில் முதலிடத்திலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டனை பின்னுக்கு தள்ளி 402 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் ஜடேஜா.

ஜடேஜா டெஸ்ட் சகலதுறை வீரர் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். 2017 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு வாரத்தில் அவர் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

மேலும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் பின்னர் ஜடேஜா பந்துவீச்சு தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்தைப் பிடித்தார், துடுப்பாட்டத்திலும் 54 ஆவது இடத்தில் இருந்து 37 ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

Story Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41