அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - சார்ள்ஸ்

Published By: Digital Desk 3

09 Mar, 2022 | 05:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரச  ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9)  இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு  சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்திய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தொடர்ந்தும் பேசுகையில்,

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு  வெளியிட்டுள்ளது.

அரச  ஊழியர்கள் என்பவர்கள் மக்கள் சேவையாளர்கள். அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் சேவை புரிகின்றனர்.

எனவே அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பு அரச  ஊழியர்களுக்கு பெரும் சுமையாகவும் ஏமாற்றமாகவும்  மாறியுள்ளது.

ஆகையால் அரச  ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் பொது நிர்வாக அமைச்சு  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் . 

இதேவேளை  தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு  சட்டமூலத்தை ஆட்சியாளர்கள் தங்களது தேவைக்கு பயன்படுத்தாதிருந்தால் அது பெறுமதியான  சட்டமூலமாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37