தமிழக - வடக்கு மீனவர் பிரச்சினையை தீர்க்க வெளிவிவகார அமைச்சர் தலையிட வேண்டும் - கூட்டமைப்பு

Published By: Digital Desk 3

09 Mar, 2022 | 05:09 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் சில அணுகுமுறைகள் காரணமாக தமிழக-வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து செல்வதனால்  இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கையாள வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார். 

தமிழக - வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை சுமூகமாக கையாளக்கூடிய அளவிற்கு தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சரிடம்  திறமை இல்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9)  இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு  சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்தினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகு மீன்பிடியால் வடக்கு,கிழக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கதைத்த போது, இந்திய பிரதமருடன் நாங்கள் கதைக்கின்றோம், பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கின்றோம் என பல தடைவைகள் கடற்தொழில் அமைச்சர் இங்கு வாக்குறுதி வழங்கியிருந்தபோதும் அதற்கான எந்த முயற்சியும்  எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகு மீன்பிடி பிரச்சினையில்  எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக  சில பிரச்சினைகள் அங்கு உருவாகின்றன. இவரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. 

ஆகவே இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்  கையாளவேண்டும். முன்பு கடற்தொழில்  அமைச்சராக மஹிந்த அமரவீர இருந்தபோதும் இப்படியான பிரச்சினைகள் வந்தன. எனினும் அவர் சரியான முறையில் கடற்படையுடன் அணுகி அந்தப்பிரச்சினைகளை  ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருந்தார். எமது மீனவர்கள் மீன்பிடிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சரிடம் அந்த  திறமை இல்லை.மீனவர்கள் எதிராக  கதைத்தால் அந்த நிர்வாகத்தை மாற்றுகின்றார்.கடற்தொழில் அமைச்சர்  இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய நிலைமையில் இல்லை. 

எனவே தான் இந்தப்பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையள வேண்டுமென கோருகின்றேன். கடற்தொழில் அமைச்சரின் அணுகுமுறை காரணமாகத்தான் வடக்கு மீனவர்களின்  பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51