எரிபொருள், மின்சார நெருக்கடி திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் - காமினி லொக்குகே

Published By: Digital Desk 3

09 Mar, 2022 | 05:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள், மின்சாரம் ஆகிய சேவைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும். பொது மக்கள் மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றை இயலுமான அளவு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பிலும்,தேசிய மின்விநியோக கட்டமைப்பிலும் பாரிய நெருக்கடி நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் கொள்வனவிற்கு பாதிப்பு ஏற்பட்டதால் எரிபொருள் விநியோகத்திலும் தற்காலிகமாக நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசம் தற்போது 20 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் கையிருப்பில் உள்ளது. 32 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் நேற்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் இரு எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடையும்.

நாடுதழுவிய ரீதியில் உள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு தேவையான எரிபொருளும்,இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளும் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. மின்சார சபை 32ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கபபட்டுள்ளது.

எரிபொருள்,மின்சாரம் ஆகிய சேவைகளில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை எதிர்வரும் வாரம் முதல் வழமைக்கு திரும்பும். இம்மாதத்தின் இறுதிவாரமளவில் இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு எரிபொருள் கிடைக்கப்பபெறும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையிலும் எரிபொருள் விலையதிகரிப்பு குறித்து இதுவரையில் அவதானம் செலுத்தப்படவில்லை. எரிபொருள் விலை சூத்திரம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை.

நெருக்கடியான நிலைமையினை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் பாவனையை இயலுமான அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40