ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க, பிரிட்டன் தடை

Published By: Vishnu

09 Mar, 2022 | 07:57 AM
image

ரஷ்யாவில் இருந்து அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளையும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தடைசெய்துள்ளன.

அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய எரிவாயு மீதான அதன் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

Russian shipping company holds PDVSA oil cargo hostage over debts | by Jon  Oronero | Medium

இது குறித்து செவ்வாயன்று காலை வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கை "ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முக்கிய உயிர் நாடியை" குறிவைக்கிறது என்றார்.

இதனிடையே 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை இங்கிலாந்து படிப்படியாக நிறுத்தும் என்று பிரிட்டிஷ் வர்த்தக செயலாளர் குவாசி குவார்டெங் செவ்வாயன்று அறிவித்தார்.

மறுபக்கம் ஐரோப்பிய ஆணையம் ரஷ்ய எரிவாயுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவையை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கும் என்று கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் எரிவாயுவில் 40 சதவீதத்தை ரஷ்யாவிலிருந்து பெறுகிறது.

எரிசக்தி ஏற்றுமதி ரஷ்யாவிற்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, ஆனால் இந்த நடவடிக்கை ரஷ்யாவை மாத்திரம் அல்ல மேற்கத்திய நுகர்வோரை பாதிக்கும்.

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது.

இதேவேளை ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றீடாக வெனிசுலா அதன் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளது.

எவ்வாறெனினும் உக்ரேன் - ரஷ்ய மோதல்கள் காரணமாக திங்களன்று ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 139 அமெரிக்க டொலர்களாக (£106)  உயர்வடைந்தது. இது சுமார் 14 ஆண்டுகளில் ஏற்பட்ட எரிபொருளின் அதிகபடியான விலை உயர்வு ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10