பெண்களை ஒன்றிணைந்து கொழும்பை ஆக்கிரமிப்போம் - முடிந்தால் தடுத்துக்காட்டுங்கள் : ரோஹினி குமாரி சவால்

Published By: Digital Desk 4

08 Mar, 2022 | 09:34 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்வரும் 15 ஆம் திகதி பெண்களை ஒன்றிணைந்து கொழும்பை சுற்றிவளைத்து ஆக்கிரமிப்போம், முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை தடுத்துக்காட்டுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சபையில் சவால் விடுத்தார்.

Articles Tagged Under: ரோஹிணி குமாரி விஜேரத்ன | Virakesari.lk

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தில்  உரையாற்றிய போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

இந்த அரசாங்கத்தின் புலமை சொத்து என்னவென்றால் டொலர் கறுப்பு சந்தையாகும். டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.

எரிவாயு, எரிபொருள், பால்மாவிற்கான நீண்ட வரிசையே இந்த ஆட்சியின் அடையாளமாகும். நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையாகும்.

இன்று பெண்கள் தினமாகும், ஆனால் பெண்கள் தினத்தை கொண்டாடிக்கொண்டு நாட்டில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களின் பிரச்சினைகளை பேச சென்றால் அவர்களும் அரசாங்கத்தினால் தாக்குதலுக்கு உற்படுத்தப்படுகின்றனர். எனக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது.

ஆனால் இன்றுவரை இந்த அரசாங்கத்தினால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது போய்விட்டது. ஹிருணிகாவின் வீட்டிற்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நாளாகவும் வீட்டுக்கு அடாவடிக்காரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஹிருணிகா ராஜபக் ஷவினரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தனர், அவரையே தாக்கவும் அச்சுறுத்தவும்  அடியாட்களை அனுப்பியுள்ளனர். கட்சி அலுவல்களும் தாக்கப்பட்டது. 

கல்விமான்கள் என கூறிக்கொண்டு மாடுகள் போன்று செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் தொடர்புபட்டுள்ளனர். 15 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம், பெண்களை ஒன்றிணைந்து கொழும்பை ஆக்கிரமிப்போம், முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை நிறுத்திக்காட்டுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04