மெக்ஸிக்கோ கால்பந்தாட்டப் போட்டியில் மோதல் : 17 பேர் பலி 26 பேர் படுகாயம்

08 Mar, 2022 | 09:30 PM
image

(எம்.எம்.எஸ்)

மெக்ஸிக்கோவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இரண்டு தரப்புக்களால் ஏற்பட்ட மோதலால் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்தவர்களின் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்  தெரிவிக்கின்றன.

மெக்ஸிக்கோவின் குவெரெட்டாரோ மாநிலத்தின் கொரேகிடோரோ விளையாட்டரங்கில் கடந்த ஞாயிறு இரவன்று  அட்லஸ் மற்றும்   குவெரெட்டாரோ  அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியிலேயே இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.  

போட்டியின் 62 ஆவது நிமிடத்திலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் போட்டியின்  இரண்டாம் பாதி ஆட்டம் கைவிடப்பட்டது. 

இரு அணிகளினதும் ஆதரவாளர்கள் சரமாரியாக கையில் சிக்கிய பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர்  தாக்கி அடித்துள்ளனர். 

மைதானத்திலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்களை காப்பற்றுவதற்காக காவலர்கள் விரைவாக வாயிற் கதவுகளை திறந்து விட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. 

இந்த மோதல் சம்பவத்தால் இப்போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ கால்பந்தாட்ட சம்மேளனம் ‍குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50