எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் - காமினி லொகுகே

Published By: Digital Desk 3

08 Mar, 2022 | 09:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்று அல்லது நாளையுடன் தீர்வு கிடைக்கப்பெறும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலுசக்தி துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக பெற்றுக்கொள்ள இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீசல்,பெற்றோல் மற்றும் உராய்வு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலர் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்று அல்லது நாளையுடன் தீர்வு கிடைக்கப்பெறும்.

எரிபொருள் பற்றாக்குறை தோற்றம் பெறும் என்ற அச்சத்தின் காரணமாகவே பொது மக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கிறார்கள்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலைமையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். எவ்வாறு இருப்பினும் எரிபொருள் விலையேற்றம் குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின்விநியோக தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56