தென் சீனக் கடலில் சீனா போர் பயிற்சி

08 Mar, 2022 | 02:44 PM
image

(ரொய்ட்டர்ஸ்)

சீனா அதன் தெற்கு மாகாணமான ஹைனான் மற்றும் வியட்நாம் இடையே ஒரு பகுதியில் தென் சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக இராணுவ ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நடவடிக்கைகளை காரணம் காட்டி அப்பகுதியில் காணப்பட கூடிய கப்பல் போக்குவரத்து  விலகி இருக்குமாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய நீர்வழிப்பாதையின் பெரும்பகுதியை சீனா உரிமை கோருகிறது, அந்த கடல் பகுதியில் பெரிய கப்பல்களுக்கான பாதைகளும் உள்ளன.

மேலும் அந்த கடல் பகுதியை  அண்டிய திட்டுகளிலும் செயற்கை தீவுகளிலும்  விமான தளங்களை உருவாக்கியுள்ளது இதனால் பிராந்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா பெரும் கவலையை வெளியிட்டுள்ளன.

இந்த பயிற்சி நடவடிக்கைகள்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என  ஹைனான் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

ஹைனானின் சன்யாவிற்கும் வியட்நாமிய நகரமான ஹியூவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதி என்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் சான்யா  பகுதியில் சீனாவின் கடற்படை தளம் உள்ளது.

இப்பகுதியின் ஒரு பகுதி 200 கடல் மைல் வியட்நாமின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ளது, இதனால் சீனா தமது இறையாண்மையை மீறுவதாக வியட்நாம் கடுமையாக விமர்சித்து வருகின்றது. 

எவ்வாறாயினும் தென் சீனக் கடலில் சீனா இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்,ஆனால் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளும் அந்த கடல் பகுதியில்  உரிமைகோரல்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17