நீர்கொழும்பு நகரத்தில் சமிச்சை ஒளி தூண் அருகில் நன்றாக உடை அணிந்து கைக்குழந்தையுடன் வாகனங்களில் பிச்சையெடுப்பதை தொழிலாக செய்யும் 3 இளம் பெண்களை நீர்கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கண்டித்து சரீர பிணையில் விடுதலை செய்துள்ளது.

இதேவேளை, இவர்களின் குழந்தைகளை வைத்திய பரிசோதனை செய்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த மூன்று இளம் பெண்களும் மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு ஒரு குழந்தையை பயன்படுத்தியே இவ்வாறு பிச்சையெடுத்துள்ளனர்.

இவர்களின் கணவன்மார் மாதத்திற்கு 30 ஆயிரம் சம்பளம் பெறும் நிரந்தர தொழிலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த 3 இளம் பெண்களும் ஒரு மணித்தியாலத்திற்கு 3 ஆயிரம் ரூபாயினை பிச்சை எடுப்பதன் மூலம் பெற்றுவந்துள்ளனர்.

மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.