இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தாருங்கள்  - தமிழக முதல்வருக்கு வடக்கு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கடிதம்

Published By: Digital Desk 4

07 Mar, 2022 | 07:09 PM
image

( எம்.நியூட்டன்)

 

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை. இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்று தருமாறும்  இழுவைப்படகுகளுக்கு நடவடிக்கை எடுக்ககோரியும் வடக்கு  கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

Articles Tagged Under: தாக்கதல் | Virakesari.lk

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

முப்பது வருடகால யுத்தத்தினால் சொல்லமுடியாத துயரங்களையும், அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம். யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவுக்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம்.

யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது நன்றியினை தெரிவிக்கின்றோம்.

யுத்தத்துக்குப் பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டிபெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது. வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தமிழ்நாட்டு இழுவைப்படகுகள்.

இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச்செல்வதனால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம்.

கடல் வளங்களைச் சுரண்டும் இழுவைமடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரியவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழுலைமடி முறையால் வட இலங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு கடற்றொழிளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது.

இந்தப்பிரச்சினை இலங்கை கடற்றொழிலாளருக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளருக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிகின்றது. இழுவைப் படகுகளை முற்றாக நிறுத்துமாறு” இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பல பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றபோதிலும், அவற்றின் மூலமாக ஒரு தீர்வையும் எட்டமுடியவில்லை. 

உண்மையில் இந்தப்பிரச்சினைக்கான தீர்வு என்பது” இரு நாட்டுக் கடலிலும் இழுவைப்படகு முறையினைத் செய்வதாகும். எனினும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் விருப்பு என்பது இரு நாடுகளின் மத்திய மற்றும் மாநில அரசியல் தலைமைத்துவங்களிடம் இருக்கவில்லை.

நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு தென்னிந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதி மக்களுக்காக நீங்கள் முன்வைத்த தீர்வுகளை அறிந்த நாம் உங்களுக்கு எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம். உங்களுடைய இவ்வாறான முற்போக்கான பார்வையில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும். வட இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59