பூஜா, ஸ்நேஹ், ராஜேஸ்வரியின் அபார ஆட்டங்களால் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் 

Published By: Digital Desk 4

07 Mar, 2022 | 04:15 PM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக மவுன்ட் மௌங்கானுய் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 107 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கு பெரும் காரணமாக இருந்த சகலதுறை வீராங்கனைகள் பூஜா வஸ்த்ரேக்கார், ஸ்நேஹ் ரானா ஆகிய இருவரும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

INDvPAK, Women's world cup

அத்துடன் பந்து வீச்சில் 4 விக்கெட்களை வீழ்த்திய ராஜேஷ்வரி கயாக்வாடும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி பாராட்டைப் பெற்றார்.

பூஜா மற்றும் ஸ்நேஹ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில்  122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். அவர்கள் பகிர்ந்த 122 ஓட்டங்கள் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7ஆவது விக்கெட்டுக்கான சாதனை இணைப்பாட்டமாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுதத்தாடத் தீர்மானித்த இந்தியாவின் அதிரடி ஆரம்ப வீராங்கனை ஷவாலி வர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மித்ரி மந்தானா (52), தீப்தி ஷர்மா (40) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 96 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் 67 பந்துகளில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்த இந்தியா பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

தீப்தி ஷர்மா, ஸ்மித்ரி மந்தானா, ஹார்மன்ப்ரீத் கோர் (5), ரிச்சா கோஷ் (1), மிதாலி ராஜ் (9) ஆகியோரே 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆடுகளம் விட்டு வெளியேறினர்.

Image

114 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்ற மோசமான நிலையில் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஸ்னேஹ் ரானா (53 ஆ.இ.), பூஜா வஸ்த்ரேக்கார் (67) ஆகிய இருவரும் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர்.

இறுதியில் 50 ஓவர்கள் நிறைவில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் பந்துவீ;ச்சில் நஷ்ரா சாந்து 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிதா தார் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Image

258 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீராங்கனை சித்ரா ஆமீன் 30 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் ராஜேஷ்வரி கயக்வாட் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜூலான் கோஸ்வாமி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்நேக் ரானா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20