ஜடேஜாவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்தியது இந்தியா

07 Mar, 2022 | 07:09 AM
image

(என்.வி.ஏ.)

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரின் அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 3 நாட்களுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.

Virat Kohli, Rishabh Pant and Rohit Sharma share a light moment, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளை இந்தியா பெற்றது.

Ravindra Jadeja was on a wicket-taking spree, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

ஞாயிற்றுக்கிழமை (06) நிறைவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டி சில் மைல்கற்களை பதவுசெய்தமை விசேட அம்சமாகும்.

ஓரே டெஸ்ட் போட்டியில் 150க்கு மேல் ஓட்டங்களைக் குவித்ததுடன் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த 6ஆவது வீரர் என்ற பெருமையை ரவிந்த்ர ஜடேஜா பெற்றார்.

Ravindra Jadeja is elated after trapping Angelo Mathews in front, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

ரவிந்த்ர ஜடேஜா இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் 2 இன்னிங்ஸ்களிலும் 9 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தினார்.

Charith Asalanka smashes one over the bowler's head, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

டெஸ்ட் பந்துவீச்சில் கபில் தேவின் 434 விக்கெட்கள் என்ற மைல்கல்லை கடந்து இந்தியா சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வினும் இந்த டெஸ்ட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார்.

Angelo Mathews strikes one down the ground, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

இவர் அரைச் சதம் குவித்ததுடன் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் அணில் கும்ப்ளே மொத்தமாக விழ்த்திய 619 விக்கெட்களுக்கு அடுத்தபடியாக 436 விக்கெட்களுடன் அஷ்வின் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Team-mates mob Mohammed Shami after a wicket, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சகலதுறைகளிலும் அபரிமதிமாக பிரகாசித்த அதேவேளை, இலங்கை வீரர்கள் பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் பிரகாசிக்கத் தவறினர்.

Mohammed Shami had Dimuth Karunaratne caught behind, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

அத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 129.2 ஓவர்களை எதிர்கொண்டு 574 ஓடடங்களுக்கு 8 விக்கெடகள் என்ற நிலையில் டிக்ளயார் செய்தது.

இலங்கையோ 2 இன்னிங்ஸ்களிலும் 125 ஓவர்களை எதிர்கொண்டு மொத்தமாக 362 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியை அடைந்தது.

Players celebrate after Pathum Nissanka nicks behind, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

மேலும் மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 3 தொடர்ச்சியான ஆட்டநாயகன் விருதை ரவிந்த்ர ஜடேஜா வென்றெடுத்தார்.

வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய இந்தியா, இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் 8 விக்கெட்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது டிக்ளயார் செய்தது.

Rohit Sharma dives to catch Lahiru Thirimanne's edge, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

ரவிந்த்ர ஜடேஜா 228 பந்துகளை எதிர்கெர்ணடு 17 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரை விட ரிஷாப் பன்ட் (94 - 9 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்கள்) ரவிச்சந்திரன் அஷ்வின் (61), ஹனுமா சிங் (58), விராத் கோஹ்லி (45) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

Ravindra Jadeja picked up his tenth five-wicket haul, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

6ஆவது விக்கெட்டில் ரிஷாப் பன்ட்டுடன் 104 ஓட்டங்களைப் பகிர்ந்த ரவிந்த்ர ஜடேஜா, 7ஆவது விக்கெட்டில் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் மேலும் 130 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அத்துடன் வீழ்த்தப்படாத 8ஆவது விக்கெட்டில் மொஹம்மத் ஷமியுடன் 109 ஓட்டங்களை ரிஷாப் பன்ட் பகிர்ந்தார்.

இலங்கை பந்துவீச்சில் சுரங்க லக்மால் 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 135 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லசித் எம்புல்தெனிய 188 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Rohit Sharma signals for the review, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

இரண்டாம் நான் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை பகல் போசன இடைவேளைக்கு முன்னர் ஏஞ்சிய 6 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்ளையும் கைப்பற்றினர்.

Ravindra Jadeja celebrates the dismissal of Niroshan Dickwella, India vs Sri Lanka, 1st Test, Mohali, 3rd day, March 6, 2022

தொடர்ந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 60 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

பந்தவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35