ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் பேரிழப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டனர் -  ஜோன்ஸ்டன் 

Published By: Digital Desk 4

06 Mar, 2022 | 09:58 PM
image

அமைச்சர்களானாலும் , இராஜாங்க அமைச்சர்களானாலும்  அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்க்கட்சியில்  இருந்து செய்தவற்றையே தற்போதும் செய்கின்றனர்.

தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க  முயல்வதாக இருந்தால் அதனால் பேரிழப்பு ஏற்படும்.

எனவே தான் அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

"19 ஆவது திருத்ததினால் உண்டான நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு ஐ.தே.க.வும்,  ஜே.வி.பி.யுமே பொறுப்புக்கூற வேண்டும்" | Virakesari.lk

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மஹிந்த அலையை ஏன் உருவாக்கினார்கள்? மஹிந்த அலை இன்றி அவர்களால் பயணிக்க முடியாது. அனைவரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தித்தான் அரசியல் செய்தார்கள். அவர் இல்லாமல் அவரது பெயரை பயன்படுத்தாமல் யாரும் கூட்டம் நடத்த முடியாது. அதுதான் கசப்பான உண்மை. அவரைக் காண்பித்தால் தான் அவர்களுக்கு அரசியலில் இருக்க முடியும்.

பிரதமரால் தான் நாங்கள் இன்று இந்த மாவட்டத்தில் இருக்கிறோம். அவருடன்  இருப்பதால் மக்கள் எங்களை மதிக்கிறார்கள்.  அதுதான் யதார்த்தம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாங்கள் இருப்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுகிறோம். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அவரை தவிர வேறு எதையும் யாராலும் செய்ய முடியாது.

அப்போது கோட்டாபய ராஜபக்ஷவை சுகததாச விளையாட்டு அரங்குக்கு அழைத்து வந்து எனது சகோதரன் எனக்கூறி , குடும்ப உறுப்பினரைப் போல நினைத்து உதவி செய்யுமாறு பிரதமர் மஹிந்த கோரினார். மக்கள் அதை ஏற்றுக்கொண்டு 69 இலட்சம் வாக்குகளை அளித்தார்கள். அதே போன்று பிரதமருக்கும் அதிகமாக வாக்களித்தனர். அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து இவ்வாறு வாக்களித்தார்கள்.

2015க்குப் பிறகு அவர் இல்லாத காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை மக்கள் பார்த்தார்கள். இறுதியாக மக்கள் தமது நன்றிக்கடனை செலுத்தினார்கள். அவருக்கு எதிராக இருந்தவர்களும் அவரது திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அதனால்தான் வடகிழக்குப் சக்திகளும், சர்வதேசப் சக்திகளும் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த போதும் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

இன்று நமக்கு பல சவால்கள் உள்ளன. 2015 க்குப் பிறகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்திருந்தால், கொவிட் அல்ல, எந்த நெருக்கடியானாலும் நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. அவராhல் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரம் அழிக்கப்பட்டது. அவர் உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அதனால்தான் டொலர் நெருக்கடி ஏற்பட்டது. சஹாரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகுதான் வெளிநாட்டினர் இந்த நாட்டிற்கு வருவது தடைப்பட்டது. டொலர் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய பொருளாதாரத்தை நாசமாக்கி  கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு கடைசி இடத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. இதுதான் யதார்த்தம்.

உலகம் முழுவதும் கொவிட் கொள்ளை நோய் தாக்கியது.  அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.   மஹிந்த ராஜபக்ஷ ஒரு முதிர்ந்த தலைவர் என்று நாங்கள் அப்போது கூறினோம். அதைத்தான் இந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர். இன்னொரு பிரதமர் இருந்திருந்தால் இன்று என்ன நடக்கும்? உள்ளேயும் வெளியேயும்  எதிரிகள் இருக்கையில் இன்னொரு பிரதமர் இருந்தால் என்ன நடந்திருக்கும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலேயே ஜனாதிபதியும் அரசாங்கமும் தப்பித்துள்ளனர்.

பொம்மை பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் இன்று இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் அழிந்திருப்பார்கள். இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் தொற்றுநோயை மிகவும் சாதுரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டார். இந்த கூட்டணி தான் இன்று பித்தத்தை வெல்லவும் உதவியது. எனவே, அந்த கூட்டணி இன்றும் எந்த பிரச்சினையும் இல்லாமல், மிகவும் சுதந்திரமாக வேலை செய்ய சகல அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது .

சவால் விடும் பிரதமர் ஒருவர் இருந்திருந்தால் இன்று பல பிரச்சனைகள் வந்திருக்கும். 20 ஐ கொண்டு வந்து அரசியலமைப்பை திருத்தினோம். சிலருக்கு பிடிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிறைவேற்றிய அரசியலமைப்பு திருத்தத்தில் சிறந்த விடயங்கள் காணப்படுவதாக பலர் கூறினர். ஆனால் அவை பல பிரச்சினைகளை உருவாக்கின. எவ்வாறிருப்பினும் இந்த சவால்கள் அனைத்தையும் நாம் எதிர்கொண்டோம்.

நாட்டில் எரிபொருள் இல்லை என்று கூறியமையால் மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ள வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இவ்வாறு குழப்பத்தை உண்டாக்க முயற்சித்தனர்.

சில அமைச்சர்களானாலும் , இராஜாங்க அமைச்சர்களானாலும்  அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்க்கட்சியில்  இருந்து செய்தவற்றையே தற்போதும் செய்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க  முயல்வதாக இருந்தால் அதனால் பேரிழப்பு ஏற்படும். எனவே, விருப்பம் இல்லாத நிலையிலும் எமது அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானங்களை எமது ஜனாதிபதி எடுக்க வேண்டியிருந்தது.

இப்போது நிதியமைச்சரைத் தாக்குகிறார்கள். அமைச்சு பதவியை கொடுத்தாலும் ஜனாதிபதியிடம் இருந்து   பெற மாட்டோம் என்கிறார்கள். எனவே இதைப் பார்க்கும் போது எதிர்க்கட்சியின் பணியை அரசாங்கத்திற்குள் இருந்து  செய்வதாக தோன்றுகிறது . எனவே பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொள்கையையே எமது ஜனாதிபதியும் பின்பற்றுகின்றார்.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மீண்டும் ஒருமுறை இந்த நாட்டு மக்கள் எரிபொருள் பிரச்சினைகளை சந்திக்க இடமளிக்க மாட்டோம். மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04