புதிதாக சந்தையில் மீள் அறிமுகம் செய்யப்பட்ட Wild Elephant பானம், இளைஞர்கள் மத்தியில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டதாகும். 

இளைஞர்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெவ்வேறு செயற்பாடுகளுடன் Wild Elephant பானம் தற்போது இணைந்து செயற்படுகிறது. இதனூடாக அவர்களுக்கு வலிமையயும், நம்பிக்கையும், சகல விடயங்களிலும் வெற்றியீட்டுவதற்கான தைரியத்தையும் பெற்றுக்கொடுக்கிறது.

இலங்கையின் மோட்டர் பந்தய விளையாட்டு போட்டிகளில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களைக் கொண்ட அணியான Hellibees Racing க்கு வலுவூட்டும் பங்காளராக Wild Elephant கைகோர்த்துள்ளது. இளம் சாரதிகளுக்காக கொண்டுள்ள Hellibees Racing என்பது படிப்படியாக குறுகிய காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளது. உள்ளுர் பந்தய களத்தில் பெருமளவு வரவேற்பையும் பெற்றுள்ளது.

Hellibees Racing உடனான புதிய பங்காண்மையின் ஊடாக, உள்நாட்டு பந்தய சாரதிகளின் ஆளுமை வளர்ச்சியில் தலைமைத்துவம் வகிக்கும் வாய்ப்பு Wild Elephant க்கு கிடைத்துள்ளது. அத்துடன், துறையில் காணப்படும் இளைஞர்களை கவர்வது, ஈடுபடுத்துவது போன்றவற்றையும் Hellibees Racing அணியுடன் இணைந்து Wild Elephant முன்னெடுக்கிறது.

Hellibees Racing உடனான பங்காண்மை என்பது, இலங்கையின் பந்தய துறையில் Wild Elephant ஈடுபட்டுள்ள முதலாவது தடவை அல்ல என்பதுடன், பல ஆண்டுகளாக எலிபன்ட் ஹவுஸ் பானங்கள் மற்றும் Wild Elephant ஆகியன இலங்கையின் புகழ்பெற்ற பல பந்தயங்களுக்கு அனுசரணை வழங்கியுள்ளன. இதில், Gunner Super Cross, அண்மையில் நடைபெற்ற வலவே சுப்பர் குரொஸ் 2016 மற்றும் விரைவில் நடைபெறவுள்ள கொமான்டோ சலேன்ஜ் ஆகியன உள்ளடங்குகின்றன.

Hellibees Racing ஸ்தாபகர் முராட் இஸ்மைல் கருத்துத் தெரிவிக்கையில்,

“2015 மே 17ம் திகதி நாம் எமது பயணத்தை 2 மோட்டார் சைக்கிள்கள், 2 நிகழ்ச்சிகள் மற்றும் 2 வெற்றிகளுடன் ஆரம்பித்திருந்தோம். ஒரு வருடத்துக்கு சற்று அதிகமான காலப்பகுதியினுள் தற்போது 20க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நாம் கொண்டுள்ளதுடன், 50 க்கும் அதிகமான வீரர்கள், 20க்கும் அதிகமான அனுசரணையாளர்கள் மற்றும் பங்காளர்களையும் நாம் கொண்டுள்ளோம். குறுகிய காலத்தில் இது சிறந்த வளர்ச்சியாகும்”.

“உண்மையான விளையாட்டு வீர, விராங்கனையாக உயர்ந்த மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தச் செய்வது என்பது எமது பிரதான இலக்காகும். ஒழுக்கம், செயன்முறை, பயிற்சி, அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக உள்நாட்டு ரேசிங் துறையில் புரட்சியை ஏற்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது எதிர்வரும் பந்தயங்களுக்கு அனுசரணை வழங்க எம்முடன் இணைந்துள்ள Wild Elephant நாமத்துக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

அத்துடன், “Safety in Racing” எனும் தொனிப்பொருளில் Wild Elephant மற்றும் Hellibees Racing ஒன்றிணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதன் மூலமாக முறையான சாரதி பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், உள்நாட்டில் நடைபெறும் பந்தயங்களில் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதை குறைப்பது இலக்காகும்.

சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி பானங்கள் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பதில் தலைவருமான தமிந்த கம்லத் கருத்துத் தெரிவிக்கையில்,

“Hellibees Racing அணியின் வலுவூட்டும் பங்காளராக இணைந்து செயலாற்ற வாய்ப்புக்கிடைத்ததையிட்டு நாம் பெருமையடைகிறோம். இளம் மற்றும் சுறுசுறுப்பான பந்தய அணி, உள்நாட்டு பந்தயத்துறையில் தனது திறமைகளை பெருமளவில் வெளிப்படுத்தியுள்ளது. 

எமது பெருமளவான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த பங்காண்மை அமைந்திருக்கும் என்பதுடன், புதிய மேம்படுத்தப்பட்ட  Wild Elephant என்பது கொண்டுள்ள திறனையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.