நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

Published By: Digital Desk 4

04 Mar, 2022 | 09:41 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக மவுன்ட் மௌங்கானுய் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் 3 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் பரபரப்பான வெற்றியீட்டியது.

ICC Women's World Cup 2022, NZ-W Vs WI-W: West Indies Pull Off Sensational Last-over Win Against New Zealand

மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் ஹேலி மெத்யூஸ் குவித்த அபார சதம் பிரதான பங்காற்றியது.

257 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பாக அணித் தலைவி சொஃபி டிவைன் குவித்த சதம் வீண்போனது.

இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி வரவேற்பு நாடான நியூஸிலாந்துக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீராங்கனை ஹேலி மெத்யூஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 128 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்ட்றிகள், 1 சிக்ஸுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார்.

ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகளில் செடீன் நேஷன் 36 ஓட்டங்களையும் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லர் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் லீ தஹுலு 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெஸ் கேர் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சொஃபி டிவைன் தனி ஒருவராகப் போராடி 10 பவுண்ட்றிகளுடன் 108 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கை 215 ஓட்டங்களாக இருந்தபோது 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கேட்டி மார்ட்டின், ஜெஸ் கேர் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்கச் செய்தனர். ஆனால் கேட் மார்ட்டின் (44), ஜெஸ் கேர் (25) ஆகிய இருவரும் டொட்டினின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க நியூஸிலாந்தின் வெற்றி நழுவிப் போனது.

கடைசி வீராங்கனை ப்ரான் ஜோனாஸ் இல்லாத ஒரு ஓட்டத்தை பெறவிளைந்து ரன் அவுட் ஆனதுடன் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி உறுதியானது.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் கடைசி ஓவரை மாத்திரம் வீசிய டியேண்ட்ரா டொட்டின் 5 பந்துகளில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். அவரை விட ஹேலி மெத்யூஸ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அனிசா மொஹமத் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41